Close
நவம்பர் 21, 2024 11:14 மணி

கந்தர்வகோட்டை அருகே உலக ஆட்டிச தினம் கடைப்பிடிப்பு

புதுக்கோட்டை

கந்தர்வகோட்டை அருகே நடைபெற்ற உலக ஆட்டிச தினம்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியம் துவார் இல்லம் தேடி கல்வி மையத்தில் உலக ஆட்டிச தினம் கடைபிடிக்கப்பட்டது.

 அரசு உயர்நிலைப் தலைமை ஆசிரியர் பொறுப்பு ரவீந்திரன் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில்  இல்லம் தேடி கல்வி மைய ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ரகமதுல்லா கலந்து கொண்டு உலக ஆண்டிச தினம் குறித்து பேசியதாவது: உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு மன இறுக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 2 ஆம் தேதி உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் கொண்டாடப்படுகிறது.
இதன் மூலம் மன இறுக்கம் கொண்டவர்களும் சமூகத்தின் ஒரு முக்கிய அங்கமாக மாறி, சாதாரண மக்களைப் போலவே தங்கள் வாழ்க்கையை வாழ முடியும். உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தையொட்டி, அதன் வரலாறு, ஆட்டிசம் என்றால் என்ன, ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு ஆண்டும், ஆட்டிசம் சமூகத்தில் தற்போதைய சவால்கள், சாதனைகள் மற்றும் இலக்குகளை பிரதிபலிக்கும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளுடன் உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம் குறிக்கப்படுகிறது. கருப்பொருள் ஆண்டுக்கு ஆண்டு மாறுபடும் போது, அதன் சாராம்சம் சீராக உள்ளது .

2024 ஆம் ஆண்டு உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தின் கருப்பொருள் ஆட்டிஸ்டிக் குரல்களை மேம்படுத்துதல் என்பதாகும். இந்த கருப்பொருள் ஆட்டிஸ்டிக் வேறுபாடுகளை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தில் நரம்பியல் பன்முகத்தன்மையின் மதிப்பை அங்கீகரிப்பது ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று பேசினார்.இந்நிகழ்வில் தன்னார்வலர் சத்யா அனைவரையும் வரவேற்றார். தன்னார்வலர்கள் ரம்யா, தேன்மொழி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top