Close
செப்டம்பர் 19, 2024 7:22 மணி

மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் சார்பில் மரம் வளர்ப்பு விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர்

மௌண்ட் சீயோன் சில்வர் ஜூப்ளி சிபிஎஸ்இ சார்பில் நடைபெற்ற பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தை பிளாரன்ஸ் ஜெயபரதன்

மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ பள்ளி மாணவர்கள் சார்பில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ். இ பள்ளி மாணவர்கள் சார்பில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு பேரணி  (29.8. 2024) வியாழக்கிழமை    நடைபெற்றது.

பள்ளியின் கல்விக்குழுமத் தலைவர்  பிளாரன்ஸ் ஜெயபாரதன்  கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளர் களாக   மதகுபட்டி காவல்துறை துணை ஆய்வாளர் டி. கண்ணன் மற்றும்  நாச்சங்காளை  ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்பேரணியில்  பள்ளியின் தாளாளர் டாக்டர்  ஜெய்சன்கீர்த்தி ஜெயபாரதன் மற்றும் விவியன் ஜெய்சன் , பள்ளியின் முதல்வர்  அர்ஷியா பாத்திமா, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.‌ இப்பேரணியானது , மதகுபட்டி  காவல்நிலையத்தில் இருந்து தொடங்கி , வாரச் சந்தையில் முடிவடைந்தது.

  இதில், மதகுபட்டி காவல்துறை ஆய்வாளர் டி. கண்ணன்  மாணவர் களிடையே மரம் நடுவதன் அவசியம் மற்றும் மரங்களை அழிப்பதால் ஏற்படும் தீமை குறித்தும் உரையாற்றினார்.

பள்ளியில் பயிலும் எட்டாம் வகுப்பைச் சேர்ந்த மாணவி நித்திலா மரம் வளர்ப்பதன் பயன்கள் குறித்து தமிழில் உரையாற்றினார். ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மதகுபட்டி சந்தையில் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்தும் , மரத்தின் பயன்கள் மற்றும் மரங்களை வெட்டுவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் மாணவர்கள் தெருக்கூத்து நிகழ்த்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

எட்டாம் வகுப்பு மாணவிகள் ஆங்கிலத்தில் மரம் வளர்ப்பதன் பயன்கள் குறித்து பாடல் பாடினர். மேலும், மாணவர்கள் விழிப்புணர்வு முழக்கமிட்டும் , வழியெங்கும் பொதுமக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கினர். நிகழ்ச்சியின் இறுதியாக மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி பள்ளியின் இண்டராக்ட் கிளப் சார்பாக மரக்கன்றுகள் இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. அத்துடன் மரம் வளர்ப்பு மற்றும் பாதுகாப்பு முறை பற்றி அறிந்து கொள்வதற்காக QR குறியீட்டு அட்டை இணைக்கப்பட்டிருந்தது.மௌண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ பள்ளி நிர்வாகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top