Close
நவம்பர் 14, 2024 4:51 காலை

அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளிகளில் புதிய கட்டுப்பாடு

அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வெளி நபர்கள் பணி புரிந்தால் உரிய நடவடிக்கை எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாணவ- மாணவிகளின் எதிர்கால நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த திட்டங்களை பள்ளிகளில் செயல்படுத்தி மாணவர்கள், ஆசிரியர்கள் மேம்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாற்று நபர்களை வைத்து பாடம் எடுக்க சொல்வதற்கும் முற்றுப்புள்ளி வைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செயல்பாடுகள் மற்றும் உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் தமிழக பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சர் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன்மூலம் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கைகள் பாயும் எனவும் கூறப்பட்டு உள்ளது. மாணவர்களின் கற்றல் நிகழ்வுகளில் ஆசிரியர்களுக்கு மகத்தான பங்கு உண்டு. ஆனால் பணி நேரத்தில் ஆசிரியர்கள் இல்லாமல் வேறு வேலையாக வெளியில் செல்வது கண்டிக்கத்தக்கது என்று பள்ளிக்கல்வித்துறை பல சமயங்களில் அறிவுறுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் இருப்பை உறுதி செய்ய பயோமெட்ரிக் பதிவேடுகள் வருகை பதிவேடு ஆப்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கையாளப்படுகின்றன. இருப்பினும் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நேரத்தில் இல்லாமல் இருக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடத்து வருகிறது.இது பெரும் சர்ச்சையாகி உள்ளது.

மாற்று நபர்களை வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொன்ன பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி ஆசிரியர் மாட்டிக்கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அவர் இதனையடுத்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அடிக்கடி மாநிலம் தழுவிய அளவில் கற்றல், கற்பித்தல் சூழல் குறித்து கேட்டுத் தெரிந்து கொள்கிறார். மேலும் அடிக்கடி பள்ளிகளுக்கு விசிட் செய்கிறார். பள்ளிகளில் முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால் இன்னும் சில பள்ளிகளில் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனையடுத்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் உத்தரவை அடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் முறையாக பணிக்கு வருவதை கண்காணிக்க முதன்மை, மாவட்ட, வட்டார  கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கல்வி அலுவலர்கள் அதிகாரிகள் ஆய்வு செய்யவில்லை என்றால், அவர்களின் பெயர்களை வெளியிட்டு உரிய நடவடிக்கைகள் பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டு உள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top