Close
ஜனவரி 10, 2025 8:07 காலை

பச்சையப்பன் கல்லூரியின் வெள்ளி விழாவையொட்டி மாணவ,மாணவிகள் பங்கேற்ற மாரத்தான்..!

காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி 75 வந்து வெள்ளி விழாவினையொட்டி நடைபெற்ற மாநிலளவிலான 5 கீமீ மாரத்தான் போட்டியில் ஏராளமான கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

சென்னையினை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பச்சையப்பன் கல்வி அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி துவங்கி 75 ஆம் ஆண்டு வெள்ளி விழாவை ஒட்டி பல்வேறு சமூக விழிப்புணர்வு நிகழ்வுகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

அவ்வகையில் இன்று மாநிலளவிலான போதையில்லா தமிழகம் எனும் வாசகத்தை முன்னிறுத்தி ஐந்து கிலோமீட்டர் தூர மாரத்தான் போட்டி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நடைபெற்றது.

 

காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியில் துவங்கிய இந்த மாரத்தான் போட்டியினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகம் துவக்கி வைத்தார்.

இருப்பால் பிரிவினர்கள் 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட நிலையில் மாரத்தான் போட்டி காந்தி சாலை திருக்கச்சி நம்பி தெரு பெருமாள் கோயில் , சி என் அண்ணாதுரை தெரு டோல்கேட் என தொடர்ந்து பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் நிறைவு பெற்றது.

 

போட்டியினை எஸ்.பி சண்முகம் துவக்கி வைக்க, வெற்றி பெற்றவர்களுக்கு எம்பி, எம்எல்ஏ பரிசு வழங்கினர்.

ஆண்கள் பிரிவில் ஏலகிரி டான் பாஸ்கோ கல்லூரியை சேர்ந்த அருண் என்பவர் முதலிடத்தினையும், சென்னை சென்ஜோசப் கல்லூரியை சேர்ந்த ஹரிதாஸ் என்பவர் இரண்டாம் இடத்திலும், காஞ்சிபுரம் கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சேர்ந்த சுரேஷ் மூன்றாம் இடத்தை பிடித்தார்.

இதேபோல் பெண்கள் பிரிவில் காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியை சேர்ந்த சந்தியா முதலிடத்தையும், அதே கல்லூரியை சேர்ந்த பிரியா இரண்டாம் இடத்தையும், திருவள்ளூர் மாவட்டம் , கிரிஸ்ட் கலை கல்லூரியை சேர்ந்த சௌமியா மூன்றாம் இடத்தை பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு சுழற் கோப்பை மற்றும் பரிசுத் தொகையினை காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் ஆகியோர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முருகக்கூத்தன், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் செந்தில் தங்கராஜ், காஞ்சிபுரம் மதுவிலக்கு மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு டிஎஸ்பி சரண்யா தேவி, கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top