Close
ஏப்ரல் 16, 2025 12:32 காலை

கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்..!

மின்னியல் பொறியாளர்கள்-கோப்பு படம்

பொறியியல் படிப்பில் சேர விரும்புவோர் கவனத்திற்கு? எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் சிறந்த எதிர்காலம் உள்ளது. வேலை வாய்ப்புகள் குறித்து நிபுணர்களின் விளக்கங்களை பார்க்கலாம்.

பொறியியல் படிக்க விரும்புபவர்களின் பெரு விருப்பமாக கம்ப்யூட்டர் சயின்ஸ் சார்ந்த படிப்புகள் உள்ளன. அதேநேரம் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையிலும் நல்ல வேலைவாய்ப்புகளும் சிறந்த எதிர்காலமும் இருப்பதாக கல்வி ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர். எனவே இந்தத் துறையில் கிடைக்கப் பெறும் வேலை வாய்ப்புகள் குறித்து இப்போது தெரிந்துக் கொள்வோம்.

தமிழகத்தில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையில் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி தனது யூடியூப் வீடியோவில் விளக்கியுள்ளார்.

அதன்படி, இந்தியாவில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் துறையின் வளர்ச்சி மிகப்பெரியதாக இருக்கப் போகிறது. வரப்போகும் ஆண்டுகளில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகள் உருவாக உள்ளன.

இதற்கு எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் படிப்போடு, கம்ப்யூட்டிங் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொடர்பாக கற்றுக் கொள்வதும் சிறந்த வேலை வாய்ப்புக்கு உதவும்.

இண்டஸ்ட்ரியல் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் காம்போனெண்ட்ஸ், ஆட்டோமேட்டிவ் எல்க்ட்ரானிக்ஸ் ஆகிய துறைகளில் நல்ல வாய்ப்பு உள்ளது. செமி கண்டக்டர் துறையில் 1.2 மில்லியன் வேலை வாய்ப்புகள் வர உள்ளன. இதற்கு டிஜிட்டல் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வி.எல்.எஸ்.ஐ உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்து விளங்குவது அவசியம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top