புதுக்கோட்டை: புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள கொத்தமங்கலம் ராயல் பள்ளியில் மழலையர் மற்றும் மாணவ மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்விற்கு பள்ளியின் தாளாளர் வசந்தி திருஞானம் தலைமை வகித்தார். அறந்தாங்கி வழக்கறிஞர் ஆர்.பவித்தாராணி , ஆலங்குடி வழக்கறிஞர் எம் .முத்தரசன் யூ கே ஜி மழலையர் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவ மாணவிகள் 105 பேர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்திப்பேசினர்.
பட்டம் பெற்றவர்களை மேட்டுப்பட்டி அஞ்சலி பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் வாழ்த்தி பாராட்டி பேசினார் பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பட்டம் பெறுவதை பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.
நிகழ்ச்சியில், ஆலோசகர் பிரபு மற்றும் நிர்வாகிகள் கல்வியாளர்கள் சமூக ஆர்வலர்கள் ஆசிரியர் மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை நிர்வாகிகள், தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியைகள் செய்தனர் .