பெற்றோர்கள் மாணவர்களிடத்தில் தன்னம்பிக்கையை வளர்த்தால்தான் வாழ்க்கையில் சிறந்த மனிதர்களாக உருவெடுப்பார்கள் என்றார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே நகரபட்டி கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு வெகு நாட்களாகியும் கூடுதல் வகுப்பறைகள் இல்லாத நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் வைத்த கோரிக்கையைத் தொடர்ந்து புதிய வகுப்பறைகள் மற்றும் பள்ளியில் அறிவியல் ஆய்வகம் அமைக்க சுமார் ரூ. 61.62 லட்சம் ஒதுக்கீடு செய்து அதன் பணிகள் நிறைவடைந்தது.
இந்த கட்டிடத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மாணவர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து பேசியது, பெற்றோர்கள் மாணவர்களிடம் தன்னம்பிக்கை வளர்க்க வேண்டும் நாம் அளிக்கும் தன்னம்பிக்கை அவர்களை வெற்றி பாதைக்கு கொண்டு செல்லும் மாணவர்களை அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப படிக்க வைக்க வேண்டும். உங்கள் விருப்பத்தை திணிக்காதீர்கள் என்றார் அமைச்சர்.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி, இலுப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமொழி, ஒன்றிய குழு தலைவர் சுதா அடைக்கலமாணி, பேரூராட்சித் தலைவர் சுந்தரி அழகப்பன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து, ஒன்றிய துனைத்தலைவர் தனலட்சுமி அழகப்பன்,
ஒன்றிய கவுன்சிலர் ஆதிலட்சுமி சோமையா,காங்கிரஸ் கட்சியின் வட்டார தலைவர் கிரிதரன், நகரப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் செல்வராசு, முள்ளிபட்டி தலைவர் குமார், கண்டியாந்த்தம் முருகேசன்,பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தன், திமுக தகவல்தொழில்நுட்ப பிரிவு குமார், நிர்வாகிகள் பாண்டியன், சாமிநாதன், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்