தமிழ்நாடுஅரசு வேலைவாய்ப்புமற்றும் பயிற்சித்துறை சார்பில் 2022-2023-ம் கல்வியாண்டிற்கு தொழிற்பள்ளிகள் துவங்குவதற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
2022-2023-ஆம் கல்வியாண்டிற்கு புதிதாக தொழிற்பள்ளிகள் துவங்கவும், ஏற்கெனவே உள்ள தொழிற் பள்ளிகளுக்கு அங்கீகாரம் நீடிப்பு வழங்கவும் கூடுதல் அலகுகள் சேர்க்கவும் ஜனவரி 2022 முதல் 30.04.2022 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.
2022-2023 -ஆம் கல்வியாண்டிற்கு அங்கீகாரம் பெற ஒரு தொழிற்பள்ளி, ஒரு இணையதள விண்ணப்பம் சமர்ப்பித்தால் போதுமானது. விண்ணப்பிக்கவுள்ள அனைத்து தொழிற் பிரிவுகள் – கூடுதல் அலகுகளுக்கு தேவையான விவரங்கள் அனைத்தும் ஒருவிண்ணப்பத்தில் மட்டுமே அளிக்கவேண்டும்.
NEFT மூலம் தொழிற்பள்ளிபணம் (விண்ணப்பகட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம்) செலுத்தும் போதுதொழிற் பள்ளியின் வங்கிக் கணக்கில் இருந்து transfer செய்யப்படவேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் மற்றும் ஆய்வுக்கட்டணம் எந்த தொழில்பள்ளிகளுக்காக செலுத்தப்பட்டுள்ளது என்பதை Statement -ல் கண்டறிய ஏதுவாக, தாளாளர் பெயரில் உள்ள வங்கி கணக்கிலிருந்து RTGS / NEFT மூலம் செலுத்துமாறு தெரிவிக்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் ஒவ்வொருதொழிற் பிரிவிற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்தவேண்டும் விண்ணப்பக்கட்டணம்,ஆய்வுக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகள் ஆகியவை இணையதளத்தில் உள்ள Prospectus -ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசிநாள்: 30.04.2022 இதற்குபின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் திருச்சி மண்டலப் பயிற்சி இணை இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டும் விவரம் பெறலாம்.
தொலைபேசிஎண்: 0431-2422171 மின்னஞ்சல்: tnjadtrg2018@gmail.com மேற்கண்ட தகவல்களை மாவட்டஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார்