Close
நவம்பர் 24, 2024 7:08 மணி

வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

மழலையர்பட்டமளிப்பு

புதுகை திருக்கோகர்ணம் வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேனிலைப்பள்ளியில் நடந்த மழலையர் பட்டமளிப்பு விழா

புதுக்கோட்டை  திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் மழலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா (2.4.2022)  நடைபெற்றது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் குணவதி  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

மாணவர்களின் முன்னேற்றத்தில் பள்ளிக்கூடங்களுக்கு எவ்வளவு பொறுப்பு இருக்கின்றதோ அதைவிடவும் கூடுதலான பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கின்றது. ஏனென்றால் இன்றைய நிலையில் நடைபெறும் குற்றங்களை கணக்கெடுத்தால் இளைஞர்கள்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள்.

அவர்கள் ஏன் இந்த நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்றால் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் அவர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை என்பதால் தான். ஆகவே இந்த பட்டமளிப்பு விழா நாளில் பெற்றோர்கள் உறுதியெடுத்துக் கொள்ளுங்கள்.

உங்கள் குழந்தைகளிடம் நல்ல கனவை விதையுங்கள். அவர்கள் அதிகாரிகளாக மருத்துவர்களாக பொறியாளர் களாக வருவதை விடவும் முதலில் நல்ல மனிதர்களாக வளரவேண்டும் என்று குறிப்பிட்டார்.

பள்ளியின் சட்ட ஆலோசகர் அரசு சிறப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் பள்ளியின் ஆலோசகர் கவிஞர் அஞ்சலிதேவிதங்கம்மூர்த்தி பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள் பேராசிரியர் கருப்பையா, மகாத்மா ரவிச்சந்திரன், வேங்கடசுப்பிரமணி யன்.

பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல் ஒருங்கிணைப்பாளர் கௌரி பள்ளியின் மேலாளர் ராஜா, ஆசிரியைகள் சந்திரகலா, பவுலின் மற்றும் பள்ளியின் ஆசிரியப்பெருமக்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை ஆசிரியை பவானி மற்றும் காசாவயல் கண்ணன் ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிறைவாக ஆசிரியை சிம்ரன் பிரைட் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top