- மாநில கல்விக் கொள்கை குழு உறுப்பினர்கள் – தமிழக அரசு அறிவிப்புக் குழுவின் தலைவர்
புது தில்லி உயர் நீதிமன்ற மேனாள் தலைமை நீதிபதி த.முருகேசன் உறுப்பினர்கள்: பேராசிரியர் எல்.ஐவஹர்நேசன், முன்னாள் துணை வேந்தர், சவீதா பல்கலைக்கழகம்;
இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்; பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்;
பேராசிரியர் இராம சீனுவாசன், மாநிலத் திட்டக் குழு உறுப்பினர் ;முனைவர் அருணா ரத்னம், மேனாள் சிறப்புக் கல்வி அலுவலர், யுனிசெப் நிறுவனம்;
எஸ்.இராமகிருஷ்ணன், எழுத்தாளர்; விஸ்வநாதன் ஆனந்த், உலக சதுரங்க சேம்பியன். டி.எம்.கிருஷ்ணா, இசைக் கலைஞர்; துளசிதாஸ், கல்வியாளர்; முனைவர் ச.மாடசாமி, கல்வியியல் எழுத்தாளர்; இரா.பாலு, தலைமை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கிச்சான்குப்பம், நாகப்பட்டினம் மாவட்டம்; ஜெயஸ்ரீ தாமோதரன், அகரம் அறக்கட்டளை ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக் குழுவானது புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும்என தமிழக அரசு தெரிவித்துள்ளது