புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் சட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி யூத் ரெட் கிராஸ் சார்பில் மாணவர்களுக்கு சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு பழனியப்பர் அண்ணாமலையார் அரங்கில் நடைபெற்றது.
வங்கி மேலாண்மை இயல் துறை தலைவர் முனைவர் முகம்மது இப்ராஹிம் மூசா வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் மா. செல்வராசு தலைமை வகித்தார்.
நிகழ்வில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஆ.முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அடிப்படை உரிமைகள், பெண்ணுரிமை, பெண்களுக்கான சொத்துரிமை, பணியிடங்களில் பெண்களுக்கான பாதுகாப்பு, ஈவ்டீசிங் கேலி வதைத் தடுப்புச் சட்டம் , பகடி வதை தடுப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றை தெளிவாக தகுந்த சான்றுகளுடன் விளக்கிக் கூறினார்.
கருத்தரங்கு நிறைவில் மாணவர்களிடையே வினாக்கள் எழுப்பி சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு நூல்களைப் பரிசாக வழங்கினார். நிறைவில் வங்கி மேலாண்மையியல் துறை பேராசிரியர் மஞ்சுளா நன்றிகூறினார்.
விழாவை யூத் ரெட் கிராஸ் திட்ட அலுவலர் முனைவர் சி.முடியரசன் ஒருங்கிணைத்தார்.