Close
நவம்பர் 22, 2024 1:55 மணி

ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும் நடத்தை கோளாறு…கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம்..

கல்வி

ஆசிரியரின் கடிதம் சிகரம் சதிஷ்குமார்

கல்வியாளர்களை கலங்க வைக்கும் ஓர் ஆசிரியரின் கடிதம்

இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிராகப் பரவிவரும்மாணவர் களது நடத்தைக் கோளாறுகள் பற்றி,புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும், எழுத்தாளருமான சிகரம் சதிஷ்குமார் எழுதியிருக்கும் கடிதம் இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

எப்படி புரிய வைப்பது? என்னும் தலைப்பில் கையறு நிலையில் இருக்கும் ஆசிரியர்கள் நிலை பற்றி விரிவாக எழுதி இருக்கின்றார். இதுதான் அக்கடிதம்…

ஆசிரியர்களுக்குப் பயந்து மாணவர்கள் படிக்கத் தொடங்கி யதும், பட்டம் வாங்கி பார் புகழ உயர்ந்ததெல்லாம்
கடந்த கால வரலாறு.

இன்று மாணவர்களுக்குப் பயந்து ஆசிரியர்கள் தங்களது கற்பித்தலை நிகழ்த்த வேண்டிய நிலைக்கு மாற்றியிருக்கிறது கல்விமுறைஅல்லதுகற்றல் முறை..

All pass நடைமுறை தொடங்கியதிலிருந்தே ஆசிரியர்கள் fail ஆகத் தொடங்கி விட்டனர். ஒவ்வொரு ஆண்டும் அரசுப் பள்ளிகளில் 12 -ஆம் வகுப்பு முடித்துவெளியேறும் பல லட்சம் மாணவர்களில் மருத்துவ மாணவர்களை இன்னும் ஏன் சல்லடை போட்டுத் தேட வேண்டியிருக்கிறது? காரணம் All pass

தரமான பாடத்திட்டம். தரமான கல்விஇருந்தும்தகுதித் தேர்வுகளுக்கோநுழைவுத்தேர்வுகளுக்கோ தனியேCoaching  centres –ஐ தேடிக்கொண்டிருக்கின்றோமே ஏன்? காரணம் All pass.

இதுவரை  தமிழகப் பள்ளிகளில் நடக்காத சம்பவங்கள்,
அரங்கேறாத வன்முறைகள் இப்பொழுது மட்டும் எப்படி?தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் தடுமாறிப் படித்தாலும்
9 -ஆம் வகுப்பிற்குள் நல்ல முறையில் தயாராகி, பெரும்பாலும்
10 ம் வகுப்பில் தன்னைக் கற்றலுக்கு முழுமையாகத் தயாராக்கி, பொதுதேர்வு எழுதி, தேர்ச்சி அடைகின்றனர் மாணவர்கள்.

அங்கு ஒரு தேக்கம் ஏற்பட்டால் , மறுமுறை முயன்று மீண்டும் முன்னேறும் வாய்ப்பு கிடைக்கும், தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளவோ அல்லது திருந்திக்கொள்ளவோ ஒரு தருணம் அமையும்.திருந்திக்கொள்ள முடியாத அல்லது திருந்தத் தயாராக இல்லாத மாணவர்கள் அதற்குமேல் கல்வி நிலையங்களை எட்டிப்பார்க்க இயலாது..

ஆனால் கடந்த இரு ஆண்டுகளில் பொதுத் தேர்வுகளிலும்
All pass  ஐ கொரோனா அமல்படுத்தி விட்டது. ஆசிரியர்கள்
மாணவர்களின் தேர்ச்சிக்கு எதிரானவர்கள் இல்லை.

தன்னிடம் பயிலும் மாணவர்கள்தேர்ச்சி அடைவதைத் தவிர, ஓர் ஆசிரியருக்கு வேறு என்ன மகிழ்ச்சி கிடைத்து விடப்போகிறது. ஆனால், உரிய கற்றல் அடைவுகளோடு இல்லாத ஒருவன், ஒரே தர நிலையில் பிற மாணவர்களோடு இணைவதென்பது, ஒரு குடத்துப் பாலில் ஒரு துளி விசம் கலப்பதற்கு ஒப்பாகும் என்பதை உணராத வரை, உங்களுக்கு கல்வியின் ஆன்மா புரியாது.

பயிர்களோடு சேர்ந்து சில களைகளும் வளர்வதைப் போல,
எவ்வித தடங்கலுமின்றி மேல்நிலை வகுப்புக்களுக்குள்
நல்லொழுக்கமில்லாதசிலமாணவர்களும்வந்துவிட்டனர்.அத்தோடு அலைபேசியே கல்விக்கு இடையூறு என்றநாம் அதனையே இன்றைக்கு கற்றல் உபகரணமாக்கி, 24 மணிநேர இணையதள வக்கிரங்களை அவர்களின் உள்ளங்கைக ளுக்குள் திணித்து விட்டோம்.

சமூக வலைத்தளங்களின் பிடிக்குள் சிக்கியமாணவர் களில் சிலர் தாயாகப் பார்க்க வேண்டிய ஆசிரியைகளை வேறாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர். தந்தையாகக் கருத வேண்டிய கண்டிக்கும் ஆசிரியர்களை எதிரிகளாகப் பார்க்கத் தொடங்கி இருக்கின்றனர்.

வளர்ந்துவிட்ட மாணவிகளுக்கு Over coat அணிந்தால்பாதுகாப் பு உணர்வு இருக்கும் என சிந்தித்துக் கொண்டிருக் கும் நிலையில், பெண் ஆசிரியர்களுக்கும் Over Coat அணிவதே பாதுகாப்பாக இருக்குமோ என யோசிக்க வைத்திருக்கின்றது.

.இன்றையச் சூழல் ஆசிரியர்களிடம் பிரம்பை பிடுங்கி விட்டு,
மாணவர்களிடம் கத்தியைக் கொடுத்துவிட்டதைப் போல இன்றைக்கு ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருக்கின்றது இந்த சமூகம்..

இன்றைய மாணவர்கள் உடல்வயதில் சிறியவர்களாக இருந்தாலும் மனவயதில் மிகப் பெரியவர்களாகஅனைத்தை யும் அறிந்தே வைத்திருக்கின்றனர்..ஒன்றை மட்டும் புரிந்துகொள்ளுங்கள் இது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டுமல்ல.. மாணவர்களின் எதிர்காலத்தோடு, இந்த தேசத்தின் எதிர்காலம் சார்ந்த பிரச்னையும் கூட,

ஆசிரியர்களைக் குற்றவாளிகளாகக் காட்ட முயற்சிக்கும் வரை, மாணவர் சமூகம் மாண்பு அடையாது.. ஆசிரியர்கள்
அத்தனை பேரும் புனிதர்கள் என பாராட்டுப் பத்திரம்வாசிக் கச் சொல்லவில்லை. இங்கும் மதம், இனம், சாதி எனச்சாயங்களைப்பூசிக்கொண்டுதிரியும் சிறுமதியாளர் களும்  உண்டு. தவறு செய்யும் ஆசிரியர்கள் மீது தயவின்றி நடவடிக்கை எடுங்கள்..

ஆனால்உங்களது கற்றல் சீர்திருத்தத்தைஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்தின்மீது கைவிலங்கிட்டு கல்வியைச் சிறையிலடைத்து விடாதீர்கள்.. முன்னதாக தமிழக அரசுக்கு ஓர் ஆசிரியரின் மனம் திறந்த மடல் ஒன்றை எழுதி வைரலாகியது குறிப்பிடத்தக்கது..

1 Comment

  1. *அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை குற்றப்படுத்துவது தவறு*

    *Villification of Govt. School Teachers and Students is detrimental to the Society at large*

    •••••••••••••••••••••••••••••••••
    அரசுப் பள்ளி ஆசிரியர்கள் என்றாலே
    அதிகமாக சம்பளம் வாங்குபவர்கள்,
    ஆடம்பரமாக வீடுகட்டி வாழ்பவர்கள்,
    அதிக நாட்கள் விடுமுறை அனுபவிப்பவர்கள்,
    ஒழுங்காக வேலை செய்யாதவர்கள்
    வட்டித் தொழில், சைடு பிசினஸ் செய்பவர்கள்,
    வன்முறை (பாலியல் உட்பட)யாளர்கள்
    சுயநலவாதிகள்,
    சமூக அக்கறை இல்லாதவர்கள்
    என்ற *போலியான பிம்பத்தை* ,
    ஆங்காங்கே விதிவிலக்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக
    நடைபெறும் சம்பவங்களை,
    ஊதிப் பெரிதாக்கி,
    சமூகப் பொதுவெளிகளில்
    பொதுமக்களின் மனங்களில்
    உருவாக்குவதில் பெரு வெற்றி பெற்றுள்ளார்கள் வணிக உள்நோக்கம் கொண்ட வியாபாரிகளும், அரசுப் பள்ளிகளை வெறுக்கும் ஆதிக்க மனப்பான்மை கொண்டோரும்.

    அதுபோலவே
    சமீப காலமாக
    சில பள்ளிகளில் நடந்த சில சம்பவங்களை
    *மிகைப்படுத்தி*
    அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் அடங்காதவர்கள், தலைமுடி சீவாதவர்கள்,
    சிகரெட், மது குடிப்பவர்கள்
    கஞ்சா அடிப்பவர்கள்,
    பெண் ஆசிரியர்களை கிண்டல் செய்பவர்கள்,
    ஆசிரியர்களை மிரட்டுபவர்கள்
    என்ற பிம்பம் உருவாக்கப்படுகிறதோ
    என்ற ஐயப்பாடு எழுகிறது.

    *இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு*
    *விளங்குவதின் அடிப்படையே அரசுப் பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும்:*

    இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு
    விளங்குவதின் அடிப்படையே கல்வி வளர்ச்சிதான் என்பது அனைவரும் அறிந்ததே .
    அதற்கு அரசுப்பள்ளிகளும், ஆசிரியர்களும், மாணவர்களும் முக்கிய காரணம் என்பது நிதர்சனமான உண்மை.

    அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிரான
    மனநிலையை மக்களிடையே உருவாக்கிய அதே காரணிகள் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எதிரான மனநிலையையும் பொதுமக்களிடமும் , குறிப்பாக அவர்களுக்கு பாடம் புகட்டும் உன்னத பணிபுரியும் ஆசிரியர்களிடம் விதைக்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

    *A teacher is another Mother* என்பார்கள்.
    வளர்இளம் பருவத்தில் வேடிக்கைகாக மாணவர்கள் செய்யும் சிறு காரியங்களை
    தகுந்த ஆலோசனை மூலம் சரிசெய்து விடலாம்.

    எல்லா அரசுப்பள்ளி மாணவர்களையும் பொதுவாக குற்றவாளிகளாகப் பார்ப்பது சமூகத்திற்கு நல்லதல்ல.

    அது நாம் பெரும்பாடுபட்டு உருவாக்கிய
    அரசுப்பள்ளி கல்வி கட்டமைப்பை அழித்துவிடும்.

    தனியார் பள்ளிகளிலும் இதுபோன்ற பிரச்சினைகள் நடந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் அவை ஊதிப் பெரிதுப் படுத்தப்பட்டு பொதுவெளியை அடைவது இல்லை.
    தனியார் பள்ளிகளால் வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே கல்வி வழங்க முடியும்.

    *அரசுப் பள்ளிகளால் மட்டுமே அடித்தட்டு மக்கள் அனைவருக்கும் கல்வி அறிவை ஊட்டமுடியும். மாறுபட்ட மக்களிடையே நல்லிக்கணத்தையும், சமவாய்ப்புகளை தரக்கூடிய சமத்துவ சமூகத்தையும் உருவாக்க முடியும்.*

    ஆசிரியர்-மாணவர் நல்லுறவை வளர்ப்பதற்கான அனைத்து சூழலையும் முன்னெடுக்க வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

1 Comment
scroll to top