Close
நவம்பர் 22, 2024 4:47 காலை

பொன்னமராவதி: பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு முகாம்

புதுக்கோட்டை

பொன்னமராவதி அருகே கருப்புக்குடிப்பட்டி பள்ளியில் நடந்த சைல்டு லைன் விழிப்புணர்வு முகாம்

கருப்புக்குடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் சிறப்பு விழிப்புணர்வு  முகாம் நடத்தப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி ஒன்றியம்,
கருப்புக்குடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குழந்தைகள், பெற்றோர்களுக்கு 1098 சைல்டு லைன் சார்பில் மெகா விழிப்புணர்வு நடத்தப்பட்டது.

கருப்புக்குடிபட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி,ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ,மாணவிகள், பெற்றோர்களுக்கான 1098 சைல்டு லைன் விழிப்புணர்வு கூட்டம் குழந்தைகள் நல குழு தலைவர் சதாசிவம் மற்றும் சைல்டுலைன் திட்ட இயக்குநர் குழந்தைவேல் தலைமையில் நடைபெற்றது.

திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்தியபாமா, பொன்னமராவதி காவல் நிலைய தலைமைக் காவலர்கள் விமலாம்பாள், சித்ரா ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.

குழந்தைகளுக்கான சுய பாதுகாப்பு, பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் தடுத்தல்,சட்ட ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் பற்றிய விழிப்புணர்வை திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் உதவி ஆய்வாளர் சத்தியபாமா,1098 பொன்னமராவதி களப்பணியாளர் பூங்கொடி ஆகியோர் மாணவ, மாணவிகள்,பெற்றோர்களுக்கு விளக்கிப் பேசினர்.

இதில் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஆசிரியைகள், கிராம நிர்வாக அலுவலர், ஊர் முக்கியஸ்தர், ஊராட்சி மன்றத் தலைவர், 1098 திருமயம் களப்பணியாளர் ராஜலெட்சுமி,கிராம சேவிகா,முக்கிய சேவிகா,பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு, மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் மற்றும் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ. அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கத்தினர் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் குழந்தைகளின் எதிர்காலம் கருதி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக கருப்புக்குடிப்படி அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜ் நகர் டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாம் மக்கள் நலச்சங்கம் சார்பில் 1098 சைல்டு லைன் விளம்பரப் பலகை வைக்கப்பட்டது.

அதேபோன்று இனிவரும் காலங்களில் இது போன்று குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் 1098 சைல்டு லைன் விளம்பர பலகை வைக்க தன்னார்வலர்கள் உதவிட வேண்டும் என்று 1098 சைல்டு லைன் களப்பணியாளர்கள் கேட்டுக் கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top