Close
நவம்பர் 22, 2024 6:20 காலை

புதுக்கோட்டையில் ரூ.1 கோடியில் அரசு இசைப்பள்ளி: புதிய கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஆய்வு

புதுக்கோட்டை

புதுக்கோட்டை  நரிமேடு பகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டட கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

புதுக்கோட்டை நரிமேடு பகுதியில் மாவட்ட இசைப் பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு   (06.05.2022) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர்  அரசுத் துறைகளுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிக கட்டடங்களை கட்டுதல், பழைய கட்டடங்களை புனரமைத்து சீரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பொதுப்பணித்துறையின் மூலமாக மேற்கொண்டு வருகிறார்.

அதனடிப்படையில் புதுக்கோட்டை , நரிமேடு பகுதியில், மாவட்ட அரசு இசை பள்ளிக்கான புதிய கட்டடம் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இவ்வளாகத்தில் இசைப் பள்ளிக்கான 6 வகுப்பறை கட்டடங் கள், அலுவலக அறைகள், முதல்வர் அறை, கழிவறை, அலுவலர்கள் அறை, பொருட்கள் வைப்பறை உள்ளிட்டவை கள் 4,520 சதுர.அடி பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகின்றன.

இதன்மூலம் இசைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவி களுக்கு போதுமான இடவசதி கிடைக்கப் பெறுவ துடன், தங்களது இசை கற்றலையும் நிறைவாக பூர்த்தி செய்ய உதவிகரமாக அமையும். மேலும் இக்கட்டுமானப் பணிகள் அனைத்தும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, இசைப் பள்ளி மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் ஆட்சியர் கவிதாராமு .
ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுகுமாரன், உதவிப்பொறியாளர் பாஸ்கர், கலை பண்பாட் டுத்துறை உதவி இயக்குநர் மு.க.சுந்தர் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top