ஆசிரியர்களுக்கான விதிமுறைகளையும் வெளியிட வேண்டும் தமிழக அரசுக்கு கல்வியாளர்கள் சங்கமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறுவனர் சிகரம் சதிஷ்குமார் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா கால இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் செயல் படத் தொடங்கிய பின்பு, பள்ளி மாணவர்களிடம் நடத்தைசார் பிரச்னைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிப்படு கின்றன.பள்ளிகளில் நடைபெறும் இதுபோன்ற தவறுகள் எல்லா இடங்களிலும் ஏற்படுவதில்லை.. எல்லோ ராலும் ஏற்படுவதில்லை..
எல்லா இடங்களிலும் மாணவர்களிலும் சரி, ஆசிரியர் களிலும் சரி, பிரிவினை வாதிகளும் பிரச்னைவாதிகளும் இருக்கவே செய்கின்றனர். மாணவர்களுக்கான விதிமுறைகளை வரைமுறைப்படுத்தும் நம்அரசு, ஆசிரியர்களுக்கான வரைமுறைகளையும் வெளியிட வேண்டும்.
மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சாதிய அடிப்படையில் குழுவாக இயங்கும் ஆசிரியர் குழுக்களை, கண்டறிய வேண்டிய கட்டாயமும்,அவற்றைக் களைய வேண்டிய கட்டாயமும் கல்வித்துறைக்கு இருக்கிறது.
பள்ளி மாணவர்களிடம் தேசியத் தலைவர்களில் சிலரை மட்டும் நாயகர்களாகவும், பிறரை வில்லன்களாகவும் சித்தரிக்கும் போக்கு குறிப்பிட்ட மாவட்ட ஆசிரியர்களிடம் காணப்படுகிறது.
பள்ளி மாணவர்களை , பள்ளி வளாகத்திற்குள் காணொலி யாக எடுத்துப் பொதுவெளியில் வெளியிடும்ஆசிரியர்க ளின் அத்துமீறல்களுக்குதடை விதிக்க வேண்டும். இதற்கென தனி விதிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை உடனடியாக வெளியிட வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.