Close
நவம்பர் 22, 2024 4:46 காலை

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: மாணவர் சேர்க்கைக்கான காலக்கெடு ஒரு வாரம் நீட்டிப்பு

கட்டாய கல்வி உரிமை

கட்டாய கல்வி உரிமை சட்டம்- விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கைக்கு வருகிற 18-ஆம் தேதி வரை இணையதளத்தில்  விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டிருந்த காலக்கெடு மேலும் 19.05.2022 முதல் 25.05.2022 வரை 7 நாட்களுக்கு   நீட்டிக்கப்பட்டுள்ளது.
கல்வி
இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை  வெளியிட்டுள்ள  தகவல்: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
நடப்பு ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 20- ஆம் தேதியில் இருந்து rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக பெறப்பட்டு வருகிறது.  இணையதள வழியாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்ய 20.04.2022 முதல் 18.05.2022 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில்,  19.05.2022 முதல் 25.05.2022 வரை 7 நாட்களுக்கு விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய காலநீட்டிப்பு செய்யப்படுகிறது.
தொடர்ந்து தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மற்றும் தகுதியில்லாத நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் விவரங்கள் காரணத்துடன் பள்ளி தகவல் பலகையில் வருகிற 28.5.2022  –ஆம் தேதி வெளியிடப்படும்.
தகுதியான விண்ணப்பங்கள் 25 சதவீத இட ஒதுக்கீட்டில் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்படின் 30 -ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் மற்றும் ஒவ்வொரு பிரிவுக்கும் 5 இடங்கள் காத்திருப்பு பட்டியல் ஆகிய விவரங்களை மே  31- ஆம் தேதி பள்ளி நிர்வாகங்கள்வெளி யிட வேண்டும்.
தொடர்ந்து சேர்க்கை வழங்கப்பட்ட விவரத் தினை 4.6.2022 -ஆம் தேதி பள்ளி நிர்வாகங்கள் மாவட்ட அளவிலான அலுவலருக்கு தகவல் அளிக்க வேண்டும்.கட்டாய இலவச கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கைக் கோரும் பள்ளி மாணவரின் இருப்பிடத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க வேண்டும். அப்பகுதியில் அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி இருப்பினும் விண்ணப்பிக்கும்  மாணவர்களுக்கு மறுக்கப்படாமல் சேர்க்கை வழங்கப்பட வேண்டும்.
மேற்கண்ட அறிவுரைகளை பள்ளி நிர்வாகங்கள் தவறாமல் பின்பற்றிமாணவர்சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களும் இந்த வாய்ப்பினை முழுமையாகப் பயன் பாடுத்திகொள்ள வேண்டும். கண்ட அறிவுரை களை பள்ளி நிர்வாகங்கள் தவறாமல் பின்பற்றி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பொது மக்களும் இந்த வாய்ப்பினை முழுமையாகப்பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top