Close
செப்டம்பர் 20, 2024 4:03 காலை

மாணவர்கள் தொழில்முனைவோராக முயற்சிக்க வேண்டும்

ஈரோடு

ஈரோடு திண்டல் வேளாளர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா

மாணவர்கள் தொழில் முனைவோராக ஆக முயற்சி செய்ய வேண்டும் என்றார் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் ஜி ரவிக்குமார்.

 ஈரோடு வேளாளர் பொறியியல் கல்லூரியின் 16 -ஆவது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று  இளநிலை மற்றும் முதுகலை மாணவர்கள் 739 பேருக்கு பட்டமளித்து  மேலும் அவர் பேசியதாவது:  30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 9 பொறியியல் கல்லூரிகள் இருந்தன ஆண்டொன்றுக்கு 3000 பட்டதாரிகள் வெளிவந்தனர் தற்போது 531 பொறியியல் கல்லூரிகள் உள்ளன அதில் இருந்து ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் வெளிவருகின்றனர்.

இதைத் தவிர கலை அறிவியல் கல்லூரி மூலம் ஆண்டுக்கு ஆறு லட்சம் பேர் வெளிவருகின்றன தமிழக அரசின் கடன் ரூபாய் 20 ஆயிரம் கோடியிலிருந்து 5 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி வட்டி கட்டுகிறார்கள்.  வரவு ஒரு லட்சம் கோடி ஆகும். எனவே அரசு அனைவருக்கும் வேலை வழங்குவது இயலாது.

இதேபோன்று தனியார் துறையிலும் வேலை வழங்குவது சிரமம். மேற்கத்திய நாடுகளில் ஐடி துறை வளர்ச்சி அடைந்ததால் பலருக்கு வேலை கிடைக்கிறது. எனவே பொறியியல் பட்டதாரிகள் தொழில் முனைவோர்கள் ஆக வேண்டும்.  இதனால் அவர்கள் ஒவ்வொருவரும் பத்து அல்லது பதினைந்து பேருக்கு வேலை தர முடியும்.

ஈரோடு

இதற்காக மத்திய மாநில அரசு திட்டங்களை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் தங்களைச் சுற்றி உள்ள மக்களுக்கும் நன்மை செய்ய முடியும். வெளிநாட்டு வேலை கனவு இயல்பானது இருந்த போதிலும் எந்த வெளிநாட்டு உடன் ஒப்பிடுகையில் நம்நாடு இயற்கை வளத்திற்கு குறைந்ததல்ல .

எனவே இங்கிருந்து நீங்கள் சாதிக்க முடியும் பட்டம் பெறும் மாணவர்கள் 30, 40,  50 வயதுகளில் எப்படி இருக்க வேண்டும். என்று தொலைநோக்கு திட்டம் வகுத்துக் கொள்ள வேண்டும். அதை அடைய உழைக்க வேண்டும். தங்களை சுற்றி உள்ளவர்களிடம் மனிதாபிமானத்துடன் பழகி வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்  என்றார் அவர்.

கல்லூரி தாளாளர் எஸ் டி சந்திரசேகர் தலைவர் கந்தசாமி பொருளாளர் ப அருண் அறக்கட்டளை உறுப்பினர்கள் ராஜமாணிக்கம் குலசேகரன் நல்லசாமி முதல்வர் டாக்டர் எம் ஜெயராமன் பொது மேலாளர் பெரியசாமி உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top