Close
செப்டம்பர் 20, 2024 4:05 காலை

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்: மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

ஈரோடு

ஈரோடு மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம்

திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென அமைச்சர்  முத்துச்சாமி அறிவுறுத்தினார்.
ஈரோடு அரசு கலை அறிவியல் நடைபெற்ற மத்திய மாநில அரசுகளின் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டம் குறித்த கருத்தரங்கை வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்.

ஈரோடு
வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி

அவர் தனது உரையில் கூறியதாவது: ஏற்கெனவே படித்த இளைஞர்கள் சுய தொழில் செய்வதற்காக ஆனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் அத்திட்டத்தில் சில மாறுதல்கள் செய்து அனைவரும் பயனடைய ஏற்பாடு செய்துள்ளார்.

இதன் மூலம் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சென்னை நீங்கலாக கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது. குறிப்பாக சுகாதார பாதுகாப்பு தகவல் தொழில்நுட்ப சேவை ஆடை வடிவமைப்பு கட்டுமானத்துறை ஆட்டோமோட்டிவ் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் சில்லரை வணிகம் போன்ற எளிதில் வேலைவாய்ப்பு பெறும் துறைகளில் போக்குவரத்து உணவு தங்குமிட செலவு சீருடை பாடப் புத்தகங்களுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.

பணியிடைப் பயிற்சி பயிற்சி வழங்கப்படுகிறது பயிற்சி முடித்தவர்களுக்கு தனியார் நிறுவன வேலைவாய்ப்பு பெற்றுத் தரப்படும் சொந்த மாவட்டத்தில் பணி புரிந்தால் மாதம் ரூஆயிரம் முதல் 2 மாதங்களுக்கு வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் சொந்த மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்கள் என்றால் ரூபாய் 1,000 வீதம் மூன்று மாதங்கள் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

பிற மாநிலங்கள் என்றால் ஆறு மாதத்திற்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் இத்திட்டத்தின் கீழ் 18 முதல் 35 வயதுள்ள இளைஞர்கள் கௌஷல் பஞ்ச் என்ற கைபேசி செயலியில் தங்கள் கல்வித் தகுதிக்கேற்ப பயிற்சியை தேர்வு செய்து பதிவு செய்யலாம் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி வேண்டுபவர்கள் தீன்தயாள் உபாத்யாயா ஊரக திறன் பயிற்சித் திட்டத்தில் பதிவு செய்யலாம் .

பயிற்சிக்குப் பின் சுய வேலைவாய்ப்பு வேண்டுபவர் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் கீழ் பதிவு செய்யலாம் வீடு தேடிவந்த அவர்களுக்கு தனியார் துறையில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் தினசரி என்னை பலர் சந்திக்கின்றனர் பலர் அதிகம் படித்துள்ளனர்.

அரசு வேலைவாய்ப்பு கேட்கின்றனர் அரசு வேலைவாய்ப்பு தேர்வாணையம் மூலம் மட்டுமே பெற முடியும் எனவே தொழில் பயிற்சி பெற்று சுய வேலை வாய்ப்புகளை பெறலாம் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே கொண்டு செல்லவேண்டும்.

இதற்காக ஒரு சுற்றறிக்கையை அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தகவல் பலகையில் வைக்க வேண்டும் வேலைவாய்ப்பு துறை மூலமும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள விசேஷ பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஐஏஎஸ் ஐபிஎஸ் போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.

இதை மாணவ மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன அதைப் பெற உரிய பயிற்சியை மாணவ மாணவி பெற வேண்டும் மகளிர் திட்ட அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார் அமைச்சர் முத்துசாமி.

இதில், கலெக்டர் கிருஷ்ணன் உன்னி கல்லூரி தலைவர் ராஜமாணிக்கம் வெங்கடாசலம் மகளிர் திட்ட அதிகாரிகள் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளில் இருந்து வந்த மாணவ மாணவிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top