Close
செப்டம்பர் 20, 2024 3:51 காலை

உழவர் சந்தைக்கு களப்பயணம் மேற்கொண்ட பள்ளிக்குழந்தைகள்!

புதுக்கோட்டை

புதுக்கோட்டை உழவர் சந்தைக்கு களப்பயணம் மேற்கொள்ள வெங்கடேஸ்வரா மெட்ரிக். பள்ளி மழலையர்

உழவர் சந்தைக்கு ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக்.மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் களப்பயணம் மேற்கொண்டு புதிய அனுபவத்தை பெற்றனர்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் யுகேஜி மாணவர்கள் களப்பயணமாக உழவர் சந்தைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

மழலைக் குழந்தைகள் உழவர் சந்தையின் காய்கறிக் கடைகள் ஒவ்வொன்றுக்கும் சென்று அவரைக் காய், பீர்க்கங்காய் பாகற்காய், கத்தரிக்காய் போன்ற காய்கறிகளின் பெயர்களையும் விற்பனை செய்வோரிடம் ஆர்வமாய்க் கேட்டுத் தெரிந்து கொண்டனர்.

சந்தைக்கு வந்த மழலைகளை உழவர் சந்தை நிர்வாகத்தினர் பிஸ்கட்டுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தனர். விற்பனை செய்யும் கிராமத்து மக்களும் அன்போடு வரவழைத்து அவர்களின் ஆர்வத்தை பாராட்டி, நெல்லி, கொய்யா, பப்பாளி, பலாப்பழம், வாழைப்பழம் மற்றும் மாம்பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து மகிழ்ந்தனர்.

இது குறித்து பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசுகையில்  “ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது” என்பதைப் போல பாடங்களில் படங்களில் உள்ள பொருட்களை நேரடியாக கண்டு மாணவர்கள் அறிந்து கொள்ள இது மாதிரி களப்பயணங்களை தொடர்ந்து எங்கள் பள்ளியில் முன்னெடுக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.

உழவர் சந்தைக் களப்பயத்தில் ஆசிரியைகள் சந்திரகாலா, பௌலின், சரசு, உஷா, கமல்ராஜ், துர்காதேவி, அழகன், சின்னையா மற்றும் ராஜா ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகளை பத்திரமாக களப்பயணத்துக்கு அழைத்துச் சென்று வந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top