Close
நவம்பர் 21, 2024 6:51 மணி

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூலகக் களப்பயணம்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நூலகக் களப்பயணம் மேற்கொண்டனர்

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியின் மாணவர்கள் களப் பயணமாக புதுக்கோட்டை மாவட்ட பொது நூலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொது நூலகத்துக்குச் சென்ற ஒன்பதாம் வகுப்பு மாணவ மாணவிகளை, முதல்நிலை நூலகர் சசிகலா  வரவேற்று இனிப்புகள் வழங்கி நூலகத்தை பார்வையிட அழைத்துச் சென்றார்.

எண்ணிலடங்கா நூல்களை ஓரே இடத்தில் கண்டதும் மாணவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அடுக்கி வைக்கப்பட்டடிருந்த கட்டுரைகள், நாவல்கள், பொது அறிவு நூல்கள், கவிதைகள் என புத்தக அலமாரிகளை தேடித்தேடி மாணவர்கள் ஆர்வமுடன் புத்தகங்களை எடுத்து வாசித்தனர்.

மாணவர்களின் வாசிக்கும் ஆர்வத்தைக் கண்ட முதல் நிலை நூலகர் சசிகலா அவர்கள் மாணவர்களை நூலகத்தில் உறுப்பினர் ஆகி அனைத்து வகையான நூல்களையும் வாசிக்கலாமென ஆலோசனை வழங்கினார்.

இது குறித்து பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி பேசுகையில், மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி பல்வேறு வகையான நூல்களை கற்று அனுபவங்களைப் பெற்று வருங்காலங்களில் பேராற்றலோடு விளங்க வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் நூலகத்தினை தொடர்ந்து பயன்படுத்தி போட்டித் தேர்வுகளுக்கான குறிப்புகளைப் பெற்று அரசுப் பணிகளுக்கு செல்வதற்கு உதவும் வகையிலும் இதுமாதிரி நூலக களப்பயணங்களை மாணவர்களுக்கு ஏற்படுத்தி தருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

பள்ளி நூலக களப்பயணத்தில் ஆசிரியர்கள் அபிராமசுந்தரி, சித்திரைச் செல்வி, சத்தியராஜ், செல்வராஜ், நீலகண்டன் அம்பிகாபதி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நூலகப் பயன்பாட்டினை விளக்கினர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top