Close
செப்டம்பர் 20, 2024 1:34 காலை

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகள் திறப்பு விழாவில் பங்கேற்ற, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  கலந்துகொண்டு, 2021-22ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டினார்.

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்
மழலையர் பிரிவுகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகள் திறப்பு விழாவில் பங்கேற்ற, மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு  கலந்துகொண்டு, 2021-22ம் கல்வியாண்டில் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவிகளை பாராட்டினார்.

புதுக்கோட்டை வைரம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மழலையர் பிரிவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் உரிய வகுப்பறைகள், செயல்பாடு அடிப்படையிலான கற்றல் அறைகள் அனைத்திலும் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய ஸ்மார்ட் வகுப்புகளுடன், சிந்தனையைத் தூண்டும் வண்ணமயமான சித்திரங்கள் வரையப்பெற்று உயர் அலங்கார வடிவமைப்பு முறையில் அமைக்கப்பெற்றுள்ள வகுப்பறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் திறந்து வைத்தார்.

வைரம்ஸ் பள்ளி மாவட்ட அளவில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் இரண்டாமிடம் பெற்றுள்ளது. இதில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தளாளர் ரகுபதி சுப்பிரமணியன், பள்ளி ஒருங்கிணைப்பாளர் அஸ்வினி நாச்சியம்மை, முன்னாள் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சா.சத்தியமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top