Close
செப்டம்பர் 20, 2024 4:12 காலை

மாநில அளவிலான போட்டி தேர்வில் வெற்றி பெற்று செருப்பு தைக்கும் தொழிலாளி மகள் சாதனை…

தேவகோட்டை

சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவிகள் மெர்சி, தேவதர்ஷினி ஆகியோரை பாராட்டுகிறார் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்

மாநில அளவிலான போட்டி தேர்வில் வெற்றி பெற்று செருப்பு தைக்கும் தொழிலாளி மகள் சாதனைபடைத்தார்.தேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் வெற்றி பெற்றதால் இவருக்கு ரூ. 48,000  நிதியுதவி கிடைக்கும்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில் சிவகங்கை மாவட்டம், தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சாதனை படைத்தனர் .மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டி தேர்வில் இப்பள்ளி மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு தமிழ்நாடு முழுவதும் உள்ள மேல்நிலை,உயர்நிலை ,நடுநிலைப் பள்ளிகளில் கடந்த மார்ச் மாதம் நடந்தது.தேர்வில் வெற்றிபெறும் மாணவ மாணவியர்க்கு அவர்களின் பெயரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு துவங்கி அதன் வாயிலாக ஒவ்வொரு மாதமும் ரூ.1000  வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக மத்திய அரசின் நிதியிலிருந்து மாநில அரசு செலுத்துகிறது.தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்றனர்.

மாநில அளவில் நடைபெற்ற இந்த தேர்வில் 5900 மாணவர்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலை பள்ளியின் மாணவிகள் மெர்சி, தேவதர்ஷினி ஆகியோர் வெற்றி பெற்று தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள் .
வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செல்வமீனாள் , ஸ்ரீதர்,கருப்பையா மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இது குறித்து வெற்றி பெற்ற மாணவி தேவதர்ஷினி கூறுகையில் ,

தேவகோட்டை

நான் வெற்றி பெற்றது மிகவும் பெருமையாக இருக்கிறது.எனது வெற்றிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ,ஆசிரியர்கள், மதுரை ரயில்வே பள்ளி ஆசிரியர் துரைபாண்டியன், எனது பெற்றோர்கள் ஆகியோரது முழு ஒத்துழைப்புதான்  காரணம், அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் .

எனது அப்பா செருப்பு தைக்கும் தொழில் செய்து என்னையையும், என் அண்ணனையும் படிக்க வைத்து வருகின்றார். பள்ளி விடுமுறையிலும் , கொரோனா நேரத்திலும் எனது வீட்டுக்கே வந்து பள்ளி ஆசிரியர்கள் வழங்கிய தொடர் சிறப்பு பயிற்சியின் காரணமாகாவே நான் வெற்றி பெற்றுள்ளேன்.

இந்த மாணவி படிப்பில் திறமையாக இருப்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இதுவரை எண்ணற்ற சான்றிதழ்களும்,பல ஆயிரம் ரூபாய் பரிசும் பெற்றுளளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முடிவுகள் வெளியாவது போன்று 8 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்ததேர்வு முடிவுகள் முக்கியமானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top