Close
செப்டம்பர் 20, 2024 3:53 காலை

ஈரோட்டில் உள்ள மாநகராட்சி அரசு பள்ளி கட்டிடம் சேதம்: பெற்றோர்-பொதுமக்கள் போராட்டம்

ஈரோடு

ஈரோட்டில் மாநகராட்சி பள்ளியில் சேதமடைந்த கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி பள்ளி தலைமையாசிரியரிடம் வலியுறுத்திய பெற்றோர்கள்

ஈரோட்டில் மாநகராட்சி அரசு பள்ளியின் இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வலியுறுத்தி பெற்றோர்கள், பள்ளி தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் மாநகராட்சி பெண்கள் மேல் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6, 7, 8 -ஆம் வகுப்புகள் அந்த பள்ளியின் அருகிலேயே பள்ளிக்கு சொந்தமான மற்றொரு பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இங்கு மட்டும் சுமார் 300 -க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் திங்கள்கிழமை  பள்ளிக்கு மாணவிகள் வந்து பார்த்த போது பள்ளியின் பக்கவாட்டில் உள்ள சன் சைடு சுவர் இடிந்து விழுந்தது இதனை கண்ட மாணவிகளின் பெற்றோர் பள்ளியை உடனடியாக சீரமைத்துத் தர வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டத்திலும் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

ஈரோடு

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை  காலை பள்ளிக்கு மாணவிகளை பள்ளிக்கு விட வந்த பெற்றோர்கள் அங்கு வந்த தலைமை ஆசிரியரை முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடத்தை சீரமைக்க  வேண்டும் எனவும் அது வரை மாணவிகளுக்கு பாதுகாப்பான மாற்று இடத்தில் வகுப்புகள் எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி  வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

இதே இடத்தில் பள்ளி செயல்பட்டால் மாணவிகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்  ஏற்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top