Close
நவம்பர் 22, 2024 5:31 காலை

ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறையின் கீழ், செயல்பட்டுவரும் விடுதிகளில் மாணவ- மாணவிகள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை

மாணவ, மாணவிகள் விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ், செயல்பட்டுவரும் விடுதிகளில் மாணவ- மாணவிகளின் சேர்க்கை நடைபெறுகிறது.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் 52 பள்ளி மாணவ- மாணவியர் விடுதிகளும், 6 கல்லூரி மாணவ – மாணவியர் விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
இவ்விடுதிகளில் 2022-2023-ஆம் கல்வியாண்டில் ஏற்பட்டுள்ள காலியிடங்களில் சேர்க்கை பெற பள்ளிகளில் பயிலும் 4-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவி களும், கல்லூரி விடுதிகளில் உள்ள காலியிடங் களுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ- மாணவி களிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

விண்ணப்பங்களை https:tnadw.hms.in  என்ற இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.விடுதிகளில் புதிய மாணவ-மாணவியர் (Fresh) சேர்க்கை பள்ளி விடுதிக ளுக்கு 05.07.2022 முதல் 20.07.2022 வரையிலும், கல்லூரி விடுதிக ளுக்கு 18.07.2022 முதல் 05.08.2022 வரையிலும் பதிவேற்றம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த SC/ST மற்றும் இதர வகுப்பு மாணவ- மாணவிகள் இதனை பயன்படுத்திக்கொள் ளலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top