Close
செப்டம்பர் 20, 2024 3:56 காலை

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் காமராசர் பிறந்தநாள் விழா

புதுக்கோட்டை

பள்ளி முதல்வர்கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையில் நடந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ்கலந்து கொண்டு காமராசர் உருவப்படத்தை திறந்து வைத்தார்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந் தலைவர் காமராசர் பிறந்தநாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராசர் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமையேற்றார். புதுக்கோட்டை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் லில்லி கிரேஸ் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராசர் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து, காமராசர் பிறந்தநாள் விழாவையொட்டி நடத்தப்பட்ட ஓவியப்போட்டி,  பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி,  கட்டுரைப் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி  பேசுகையில், மாணவ மாணவிகளின் பாதுகாப்பிற்காக காவல்துறையால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிற 100, 1098. 1930 போன்ற அனைத்து உதவி எண்களையும் காவல்(காவலன்) உதவி செயலி  ஆகியவற்றின் முக்கியத்துவம் பற்றி குறிப்பிட்டார்.

பள்ளி மாணவர்கள் வரைந்த காமராசர் ஓவியக்கண்காட்சி யை அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆ. செந்தில்குமார்  துவக்கி வைத்தார். இதையொட்டி  60 க்கும் மேற்ப்பட்ட பள்ளி மழலை குழந்தைகள் பெருந்தலைவர் காமராசர் வேடம் அணிந்து வந்திருந்தனர்.

புதுக்கோட்டை

முன்னதாக “கல்வியும் காமராசரும்” “தலைவர்களை உருவாக்கிய தலைவர் காமராசர்” “மக்கள் மனதில் இன்றும் என்றும் காமராசர்” ஆகிய தலைப்புகளில் பேச்சுபோட்டியும்,  “பிறந்த தலைவர்களின் சிறந்த தலைவர் காமராசர்”, “கல்வி வளர்ச்சி நாளின் சிறப்பும் பிறப்பும்”, “பாரதத்தலைவர் காமராசர்” ஆகிய தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும்,  “சாதனைகளில் உயரமானவர் காமராசர்”,  “பெருந்தலைவர் என்ற தலைப்பில் புதுக்கவிதையும்”, “காமராசரின் முழுஉருவ ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல்” ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன.

முன்னதாக பள்ளியின் மேலாண்மை இயக்குநர் நிவேதிதா மூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். பள்ளியின் ஆலோசகர் அஞ்சலிதேவி தங்கம் மூர்த்தி வாழ்த்துரை வழங்கினார். விழாவில் மகாத்மா பள்ளி நிறுவனர் ரவிசந்திரன், வாசகர் பேரவை செயலாளர் ச.விஸ்வநாதன், துணைமுதல்வர் குமாரவேல்,  ஒருங்கிணைப்பாளர்கள் கௌரி, பவானி உள்ளிட்ட ஆசிரியப் பெருமக்களும் பெற்றோர்களும் திரளாகக் கலந்துகொண்டனர். விழாவினை தமிழாசிரியர் சு. செல்வராஜ் தொகுத்து வழங்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top