Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின்  புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ

புதுக்கோட்டை

வெள்ளாளவிடுதி அரசு பள்ளியின் புதிய பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் சான்றிதழ் வழங்கிய எம்எல்ஏ சின்னதுரை

வெள்ளாளவிடுதி அரசு உயர்நிலைப் பள்ளியின்  புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு  சட்டமன்ற உறுப்பினர்  சான்றிதழ் வழங்கி, சுற்றுச் சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

தமிழகம் முழுவதும் நடைபெறக்கூடிய பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பணியானது அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் நடத்தப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக கந்தர்வகோட்டை ஒன்றியம் வெள்ளாளவிடுதியில் செயல்படும் அரசு உயர்நிலைப் பள்ளியில் மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு பணி இன்று ஊராட்சி மன்ற தலைவர் எம்.பரமசிவம் தலைமையில் நடந்தது.

அனைவரையும் வரவேற்று, புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வழிமுறைகள் குறித்து தலைமை ஆசிரியர் சு.பங்காருலதா பேசினார்.

இந்த பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர் மறுகட்டமைப்பு கூட்டத்தில் கந்தர்வகோட்டை  சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, கலந்து கொண்டு தேர்ந்தெடுக் கப்பட்டவர்களையும், கலந்து கொண்டவர்களையும் வாழ்த்தி பேசினார்.

கந்தர்வகோட்டை

அப்போது தேர்ந்தெடுக்கப்பட்ட மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு சான்றிதழ் வழங்கி புதிய தலைவர், துணைத் தலைவர், உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்து பள்ளியின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் எனவும்,

பொதுமக்கள் அனைவரும் இணைந்து பள்ளிக்கு தேவையான பொருட்களை கல்வி சீராக கொடுத்து பள்ளியின் மேம்பாட்டிலும், வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும்,

புதிய பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் ஒற்றுமையா கவும், ஒருமித்த கருத்தோடும் செயல்பட்டு இந்த பள்ளியின் வளர்ச்சியில் பங்கெடுத்து தேவையான ஆலோசனைகளை யும், உதவிகளையும் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பின்னர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து பள்ளிக்கு ஒதுக்கப்பட்ட 7 லட்சத்தில், 99 மீட்டர் நீள சுற்றுச் சுவர் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

கந்தர்வகோட்டை

இதில் கந்தர்வகோட்டை ஒன்றிய பெருந்தலைவர் எம்.ஆர்.எஸ்.கார்த்திக் மழவராயர், ஒன்றியக் குழு உறுப்பினர் எம்.ஆர்.கே.முருகேசன், ஆசிரியர் பயிற்றுநர் சுரேஷ்குமார், ஆசிரியர்கள் சரவணமூர்த்தி, சத்தியபாமா, அம்பிகை ராஜேஸ்வரி, ஶ்ரீவித்யா, சுப்ரமணியன், பரிமளா, கலைவாணி மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதில் மேலாண்மைக் குழுத் தலைவராக பா.செண்பகம்,
துணைத் தலைவர் ச.சங்கீதா உள்ளிட்ட 20 பேர் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். புதிய உறுப்பினர்களுக்கான உறுதிமொழியை உதவி தலைமை ஆசிரியர் முத்துகுமார் கூற அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். இதில் பெற்றோர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

இதில் புதுக்கோட்டை 5 ஆவது புத்தகத் திருவிழா பதாகைகளும் வெளியிடப்பட்டன. நிறைவாக கணித ஆசிரியர் முத்துராமன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top