Close
செப்டம்பர் 20, 2024 3:50 காலை

 திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை ஆக.5 -ல் தொடக்கம்

புதுக்கோட்டை

திருமயம் அரசு கலைக்கல்லூரியில் மாணவர் சேர்க்கை தொடக்கம்

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை 05.08.2022 முதல் நடைபெறவுள்ளது.

இது குறித்து திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் (பொ) வே.நாகராஜன்  வெளியிட்ட தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2022-2023ஆம் கல்வியாண்டுக்கான இளநிலை (UG) முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வரும் 05.08.2022 வெள்ளிக்கிழமை அன்று முதல் நடைபெற உள்ளது.

05.08.2022 அன்று காலை 10 மணிக்கு ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், மாநில அளவிலான விளையாட்டு வீரர்கள், NCC முதலான சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவிற்கும், 05.08.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணிக்கு பி.எஸ்சி கணிதம் மற்றும் பி.எஸ்.சி கணினி அறிவியல் பிரிவிற்கு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் 08.08.2022 அன்று காலை 10 மணிக்கு பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம் மற்றும் பி.காம் வணிகவியல் துறை மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும். மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல், தேதி மற்றும் கட்டண விவரங்கள் கல்லூரி அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட் டுள்ளது.

05.08.2022 வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணி – சிறப்பு பிரிவு (விளையாட்டு, NCC, மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரர் பிள்ளைகள்). 05.08.2022 வெள்ளிக்கிழமை பிற்பகல் 12 மணி – இளநிலை பாடப்பிரிவுகள் (கணிதம், கணினி அறிவியல்). 08.08.2022 திங்கள்கிழமை முற்பகல் 10 மணி – இளங்கலை பாடப்பிரிவுகள் (தமிழ், ஆங்கிலம் மற்றும் வணிகவியல்;) நடைபெறவுள்ளது.

மேலும் கொண்டுவரப்பட வேண்டிய சான்றிதழ்கள் விவரம், 10வா, +1 மற்றும் +2 மதிப்பெண் பட்டியல் (அசல், நகல்கள் – 4), +2 மாற்றுச் சான்றிதழ் (அசல், நகல்கள்- 2), நிரந்தர சாதிச்சான்றிதழ் அட்டை (அசல், நகல்கள் – 2), இணையவழியில் பதிவு செய்த விண்ணப்பம் (நகல்கள் – 2), வருமானச் சான்றிதழ் (நகல்கள் – 2), பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (4), சிறப்பு ஒதுக்கீட்டு பிரிவினர் அதற்குரிய மூலச்சான்று அசல் மற்றும் நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் ஆகும்.

ஆண்டு கட்டண விவரம், பி.ஏ தமிழ், பி.ஏ ஆங்கிலம், பி.காம் வணிகவியல் ரூ.3025 – ம், பி.எஸ்.சி கணிதம் ரூ.3045 – ம், பி.எஸ்.சி கணினி அறிவியல் ரூ.2445- ம் ஆகும்.  COVID – 19 பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக இடைவெளி பின்பற்றப்படும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top