Close
செப்டம்பர் 20, 2024 1:44 காலை

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற மொழி அறிவுத்திறன் போட்டியில் சுழற்கோப்பையை வென்ற வேலம்மாள் பள்ளி…

சென்னை

சங்கர வித்யாகேந்திரா பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளிகளுக்கிடையேயான மொழி வளர்ச்சி அறிவுத் திறன் போட்டியில் சுழற்கோப்பையை வழங்கிய சி.எஸ்.ஐ.ஆர். தலைமை விஞ்ஞானி சதீஷ்குமார்

பூதமங்களம் ஆர்.ஜெகதீஸ் ஐயர் நினைவு அறக்கட்டளை சார்பில் சங்கர வித்யாகேந்திரா பள்ளியில் திருவொற்றியூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பள்ளிகளுக் கிடையேயான மொழி அறிவுத் திறன் போட்டியில் பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சுழற்கோப்பையை தட்டிச்சென்றனர்.
சென்னை திருவொற்றியூர் ஸ்ரீ சங்கர வித்யா கேந்திரா பள்ளியில் பள்ளிகளுக்கிடையேயான மாணவ,மாணவிக ளுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பேச்சு,  கட்டுரை, செய்யுள் ஒப்புவித்தல், பட்டிமன்றம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் அறிவுத்திறன் வளர்க்கும் போட்டிகள் சில நாட்களாக நடைபெற்றது.

மூன்றாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும், ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், ஒன்பதாம் வகுப்பு, பத்தாம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும், 11 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டிகளில் சென்னை மற்றும் புறநகர் பகுதியில் உள்ள 17 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து 500 -க்கும்  மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.  இதில் ஒட்டுமொத்தமாக அதிக புள்ளிகளைப் பெற்று பொன்னேரி வேலம்மாள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தைப் பெற்று சுழற்கோப்பையை வென்றனர்.

திருவொற்றியூர் திருத்தங்கல் நாடார் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். கதை கூறுதல் போட்டியில் மாநகராட்சி பள்ளி மாணவி ஜென்சி ரெமோலா முதலிடத்தைப் பெற்று சிறப்பு பரிசினை வென்றார்.
இதனையடுத்து  பள்ளியின் தாளாளர் ஜெ. ரங்கநாதன் தலைமையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சி.எஸ்.ஐ.ஆர் தலைமை விஞ்ஞானி டாக்டர் சதீஷ்குமார்,  தமிழ்நாடு கால்நடை மருத்துவக் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் கனிமொழி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சுழல் கோப்பை,  தங்க காசுகள், விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் மலர்வழி, துணை முதல்வர் சந்திரகலா, பள்ளி இயக்குநர் அவந்திகா ஹரிஹரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top