தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 12க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தேவையான தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்தனர். புதுக்கோட்டை மற்றும் அன்னவாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் என 260 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, திட்ட இயக்குனர் ரேவதி பணி ஆணைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் உதவி திட்ட இயக்குனர் ஜெயராமன், அமுதா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குமாரவேலு, நாகராஜன், வட்டார இயக்க மேலாளர் தனமணி,பவுல்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.