Close
செப்டம்பர் 20, 2024 4:34 காலை

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு… ஜோமன் பவுண்டேஷன் ஆலோசனை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை ஜோமன் ஃபவுண்டேஷன் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தருவதற்கான கலந்தாலோ;னை கூட்டம்

புதுக்கோட்டையில்  ஜோமன் பவுண்டேஷன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது தொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம்  நடைபெற்றது.

நிகழ்வில் வாராப்பூர் ஊராட்சிமன்றத் தலைவர் பசுமை தேசம் சதீஷ் குமார், நபார்டு வங்கியின் சார்பாக. நமச்சிவாயம், தமிழ்நாடு அறிவியல் இயக்க நிர்வாகி வீரமுத்து, புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்க பொருளாளர்  சரவணன் மற்றும் ஜோமன் பவுண்டேஷன் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில், ஊராட்சி தோறும் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை பெற்று தருதல், அரசு வேலை வாய்ப்புக்கான தேர்வு பயிற்சி, கணினி பயிற்சி, நகர் பகுதியில் சுயதொழில் கூடம் இவைகளைப் பற்றிய ஆலோசனைகளும் அதை செயலாற்றுவதற்கான  வழிமுறைகளும்  தீர்மானிக்கப்பட்டது.

இந்த  நிகழ்வில் சமூகமும் குடும்பமும் புறக்கணித்த ஆங்கிலத்தில் MA., PGDCA., முடித்துவிட்டு 100 நாள் வேலைக்கு செல்லும் 38 வயது பெண்ணுக்கு அந்த இடத்திலேயே இல்லம் தோறும் கல்வி மூலம் அவர் கிராம பகுதியிலேயே வேலை வாய்ப்பு உறுதி செய்து கொடுக்கப்பட்டது. மற்றொருவருக்கு பழ வியாபரத்திற்கு வண்டி தேவையையும் நிறைவேற்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.

செய்தியாளர்…ஈரநெஞ்சம் மகேந்திரன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top