புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்தில், தேசிய நகர்நல குழும திட்டத்தின் கீழ் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள மருத்துவர் (Doctor) இரண்டு (2) காலிப்பணியிடங்களுக் கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி 15.02.2023 ஆகும்.
மருத்துவர், புதுக்கோட்டை மாவட்ட அரசு நகர்புற நலவாழ்வு மையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த மருத்துவர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
அப்பணியிடத்திற்கான கல்வித் தகுதி, MBBS மருத்துவப் படிப்பு முடித்திருக்க வேண்டும். அதற்குரிய மதிப்பெண் சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும். தமிழ்நாடு மருத்துவ மன்றத்தில் (Tamil Nadu Medical Council) பதிவு செய்திருக்க வேண்டும். பதிவு செய்ததற்கான சான்று இணைக்கப்பட வேண்டும்.
விண்ணப்பதாரர் 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். கோவிட்-19 கொரோனா நோய் தடுப்பு பணிகளில் பணியாற்றிய முன் அனுபவச் சான்று கட்டாயம் இணைக் கப்பட வேண்டும். மேற்கண்ட முன் அனுபவச் சான்றுகளில் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி இருந்தால் அதற்கான முன்அனுபவச் சான்று, அம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடமும் , அரசு மருத்துவமனை அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா நோய் தடுப்பு தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி இருந்தால் அதற்கான முன்அனுபவச் சான்று அம்மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநரிடமும்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றி இருந்தால் அதற்குரிய முன்அனுபவச் சான்று அம்மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநரிடமும் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கான உரிய சான்று இணைக்கப்பட வேண்டும். மொத்த ஒப்பந்த மருத்துவர் காலிப்பணியிடம் இரண்டு (2), இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.60,000 வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடங்களுக்கான நிரப்பப்பட்ட விண்ணப்பங் களை துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை – 622 001 -என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள் பிப்ரவரி – 15.02.2023 அன்று மாலை 5.00 மணி வரை சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் வரும் விண்ணப்பங் கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இப்பணியிடங்கள் தேசிய நகர்புற சுகாதார திட்டத்தின் கீழ் முற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்டபட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப் படுகிறது.
இப்பணிகளுக்கான விண்ணப்பம் https://pudukkottai.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தகவல் தெரிவித்துள்ளார்.