புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்கொடுமையினால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்ட பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல் மற்றும் மனரீதியான ஆலோசனைகள் வழங்குவதற்காக ஒருங்கிணைந்த சேவை மையம் (One Stop Centre) 2019 முதல் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு கீழ்க்காணும் விவரப்படியான பணி காலியாக உள்ளதால் இப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மூத்த ஆலோசகர் பணி -1, கல்வித்தகுதி, முதுநிலை சமூகப் பணி-மருத்துவ உளவியல் 3 ஆண்டுகள் பணிபுரிந்த முன்அனுபவம், மாத தொகுப்பு ஊதியம் ரூ.20,000- ஆகும். வழக்கு பணியாளர் -2, கல்வித்தகுதி, சட்டப்படிப்பு – முதுநிலை சமூகப் பணி பெண் வன்கொடுமை தொடர்பாக 3 ஆண்டு பணிபுரிந்த முன் அனுபவம், மாத தொகுப்பு ஊதியம் ரூ.15,000- ஆகும். பாதுகாவலர்- 1, கல்வித்தகுதி இரண்டாண்டு முன் அனுபவமுள்ள நபர், மாத தொகுப்பு ஊதியம் ரூ.10,000- ஆகும்.
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது சுய விபரங்களை 05.07.2023 மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், புதுக்கோட்டை என்னும் முகவரிக்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்கு பின் கிடைக்கப் பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும் விவரங்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04322-222270 எனும் தொலைபேசி மூலமாகவோ அணுகி பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.