Close
நவம்பர் 21, 2024 4:50 மணி

தஞ்சை மாவட்டத்தில் காலியாக 14 வட்டார வள நபர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்ட த்தில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் காலியாக உள்ள 14 வட்டார வள நபர் (IB&CB, FI மற்றும் P&C) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.

வட்டார வள நபர் (IB&CB, FI மற்றும் P&C) தகுதிகள் விவரம்: வயது 31.07.2023 தேதிய நிலையில் 25-45 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி குறைந்தது ஏதாவது ஒரு இளநிலை பட்டப் படிப்பு. முன் அனுபவம் மகளிர் சுய உதவிக்குழு. ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கம், பயிற்சியாளர்கள், சமூகப் பணியாளர்கள், வாழ்வா தார திட்ட அனுபவம், முன்னாள் வட்டார வள நபர்கள் மற்றும் பிற அரசுத்துறை பயிற்சியாளர் குறைந்தது 3 ஆண்டு கள் முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்திருத்தல் வேண்டும்.

முன்னாள் வட்டார வள நபர்களுக்கு ஒன்றாவது முன்னுரி மையில் வழங்கப்படும். மற்ற பிற தகுதிகளுக்கான காரணி களில் மாற்றம் இல்லை. கணினி MS-Omicc, Android Mobile Application நன்கு அறிந்திருத்தல் வேண்டும், மொழி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். மகளிர் சுய உதவிக்குழுக்களில் உறுப்பினராக இருக்கும் நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பம்  அனுப்ப வேண்டிய கடைசி நாள்- 28.08.2023.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: இணை இயக்குநர் /திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, எண்-223 – இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகம், தஞ்சாவூர் -613 010.

மேற்குறிப்பிட்டுள்ள ஒப்பந்த அடிப்படையிலான வட்டார வள நபர் (IB&CH, FI மற்றும் P&C) காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட தேர்வுக்குழு வாயிலாக எழுத்து தேர்வு 50 மதிப்பெண் களுக்கும் மற்றும் நேர்முக தேர்வு 50 மதிப்பெண்களுக்கும் தேர்வு நடத்தப்படும். உரிய காலத்திற்குள் வரப்பெறாத விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. என ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top