புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம், புதுக்கோட்டை மற்றும் அறந்தாங்கி சுகாதார மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அலுவலகங்கள் மற்றும் அதன் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கீழ்கண்ட ஒப்பந்த பணியிடங்கள் காலியாக உள்ளன.
தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (LIMS -I.T Coordinator): புதுக்கோட்டை துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடத்திற் கான விண்ணப்பங்கள்வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர் M.C.A / B.E / B.Tech முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில் ஓராண்டு முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.16,500- வழங்கப்படும்.
வட்டார கணக்கு உதவியாளர் (Block Account Assistant): புதுக்கோட்டை சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட ஆதனக் கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை வட்டார கணக்கு உதவியாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
விண்ணப்பதாரர் B.Com Graduate or B.A., Corporate / BCs முடித்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும். Tally முடித்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.16,000- வழங்கப்படும்.
நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர் (MMU – Driver): அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட திருவரங்குளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை நடமாடும் மருத்துவக் குழு ஓட்டுநர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
விண்ணப்பதாரர் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.13,500- வழங்கப்படும்.
வட்டார விவர உள்ளீட்டாளர் (Block Data Entry Operator): அறந்தாங்கி சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட திருவரங்குளம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலியாக உள்ள ஒப்பந்த அடிப்படை வட்டார விவர உள்ளீட்டாளர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படு கின்றன.
விண்ணப்பதாரர் Computer Graduate or any Graduate with Diploma in Computer applications from recognized university முடித்திருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் மற்றும் ஆங்கிலம் கீழ்நிலை (Lower) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.13,500- வழங்கப்படும்.
மேற்கண்ட பணியிடத்திற்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங் களை புதுக்கோட்டை துணை இயக்குநர், சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 12.09.2023 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என தெரிவிக்கப் படுகிறது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.