புதுக்கோட்டை மாவட்டம், திருமயம்-அரசம்பட்டி, சண்முக நாதன் பொறியியல் கல்லூரியில் 22 -1-2024 அன்று நடை பெற்ற வளாக நேர்காணலில் 39 மாணவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன.
சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் ஆண்டுதோறும் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு முன்னணி தொழில் நிறுவனங்கள் நேரில் வந்து வளாக நேர்காணல் நடத்தி மாணவ,மாணவியரைத் தேர்வு செய்து பணி ஆணைகள் வழங்குவது வழக்கம். அதனடிப்படையில் நடப்புக் கல்வியாண்டிற்கான வளாக நேர்காணல் 22.1.2024 திங்கட்கிழமை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த வளாக நேர்காணல் சென்னை ஜே.பி.எம். ஆட்டோ லிமிடெட் சார்பில் நடைபெற்றது. வளாக நேர்காணலுக்கு வந்திருந்த அனைவரையும் கல்லூரி வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் மோகன் வரவேற்றார்.கல்லூரி முதல்வர் டாக்டர் குழ.முத்துராமு இந்நிகழ்வுக்கு தலைமை வகித்துப் பேசினார்.
ஜே.பி.எம். ஆட்டோ லிமிடெட் சார்பில் அதன் மனிதவள மேம்பாட்டுத்துறை உதவி மேலாளர் புருஷோத்தமன் கலந்து கொண்டார். இந்த நேர்காணலில் கல்லூரியின் இயந்திரவியல் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த இறுதியாண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
மூன்று சுற்றுகளாக நடைபெற்ற இந்த நேர்காணலில் இயந்திரவியல் துறை மாணவர்கள் 22 பேர் மற்றும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை மாணவர்கள் 17 பேர் மொத்தம் 39 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. நிறைவாக மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறைத்தலைவர் டாக்டர் வரதராஜன் நன்றி கூறினார்.
.