இந்தியாவில் மொத்தம் 1316 ஐ.ஏ.எஸ்., 586 ஐபிஎஸ் அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
தேசிய அளவில் 1,316 ஐஏஎஸ் மற்றும் 586 ஐபிஎஸ் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளதாக மாநிலங்களவையில் மத்திய பணியாளா் துறை இணை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தார்.
இது குறித்து அவா் அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘2024, ஜனவரி 1-ஆம் தேதி நிலவரப்படி, ஐஏஎஸ் பணிக்கு மொத்தமாக ஒதுக்கப்பட்ட 6,858 பணியிடங்களில் 5,542 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 1,316 பணியிடங்கள் காலியாக உள்ளன. 1,316 பணியிடங்களில் நேரடி நியமனத்துக்காக 794 பணியிடங்களும் பதவி உயா்வின் அடிப்படையில் 522 பணியிடங்களும் நிரப்பப்படவுள்ளன.
அதே போன்று ஐபிஎஸ் பணிக்கு ஒதுக்கப்பட்ட 5,055 பணியிடங்களில் 4,469 பணியிடங்கள் நிரப்பப்பட்டு, 586 பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றில் 209 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலமும் 377 பணியிடங்கள் பதவி உயா்வின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளன என தெரிவித்துள்ளார்.