தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வருகிற 9.4.2022 அன்று நடைபெறவுள்ளது.
இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு வெளியிட்ட தகவல்:
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் \ தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் \ ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து நடத்தும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பு வழங்கிட படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் கைக்குறிச்சி, ஸ்ரீ பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் 9.4.2022 அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.
எனவே வேலைதேடும் இளைஞர்கள் தங்களுக்குரிய மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை (Ration Card), புகைப்படம் மற்றும் தொழிற் பயிற்சி தொடர்பான சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளவும் மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களும் பங்கு பெற்று இளைஞர்களை வேலைக்கு தேர்வு செய்து கொள்ளவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட வேலை வாய்ப்பு வழங்கிடும் பொருட்டு அனைத்து தனியார் தொழில் நிறுவனங்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கு பெற்று இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிட தெரிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.