Close
நவம்பர் 22, 2024 12:32 காலை

சென்னையில் இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோர பாதுகாப்பு மாநாடு

சென்னை

இந்தியா உள்ளிட்ட நான்கு நாடுகள் பங்கேற்கும் கடலோரப் பாதுகாப்பு மாநாட்டின் சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கிரிதர் அரமனே.

இந்தியா உள்ளிட்ட 4 நாடுகள் பங்கேற்கும் முதல் கடலோர பாதுகாப்பு மாநாடு சென்னையில் தொடங்கியது

இந்தியா, மாலத்தீவு, இலங்கை மற்றும் மொரீசியஸ் நாடுகளின் கடலோரக் காவல் படையினர் பங்கேற்கும் கடலோர பாதுகாப்பு குறித்த இரண்டு நாள் மாநாட்டின் பாதுகாப்பு அமைச்சகச் செயலாளர் கிரிதர் அரமனே சென்னையில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இந்தியப் பெருங்கடலில் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பு 2011-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இதில் தற்போது இந்தியா, இலங்கை, மாலத்தீவு, மொரீசியஸ் ஆகிய நான்கு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.

பங்களாதேசம் தற்போது பார்வையாளராக இணைந்துள்ளது. கொழும்பு பாதுகாப்பு கூட்டமைப்பின் சார்பில் இந்நாடுகளின் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் தொடர்ந்து மாநாடுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்கும் முதல் கடலோரப் பாதுகாப்பு மாநாட்டினை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் கிரிதர் அரமனே வியாழக்கிழமை சென்னையில் தொடங்கி வைத்தார்.

கடல்சார் ஒத்துழைப்பு  அவசியம்: மாநாட்டில் கிரிதர் அரமனே பேசுகையில்,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐந்து முக்கிய கருத்துகளை வலியுறுத்தி வருகிறார். இதில்  சட்டப்பூர்வமான கடல் வர்த்தகம், கடல்சார் மோதல்களை அமைதியான முறையில் தீர்த்து வைப்பது, இயற்கை பேரழிவுகள் மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களைத் தணித்தல், கடல் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் நிலையான உள்கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம் கடல்சார் வர்த்தகத்தை அதிகரிப்பதற்கு இம்மாநாடு உறுதுணையாக இருக்க வேண்டும்.

மேலும் கடல்சார் இணைப்புகளை ஊக்குவித்தல்,  கடல்சார் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடு வது,  நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள், இணைய பாதுகாப்பு, முக்கியமான கடலோர உள்கட்டமைப்பு பாதுகாப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் தொடர்பான பொதுவான பிரச்சினைகளுக்கு கூட்டாகத் தீர்வு காண வேண்டியது அவசியமானது.

கடலோரக் காவல்படை மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க முகமைகளுக்கு இடையே மேம்படுத்தப்பட்ட ஒத்துழைப்பை ஏற்படுத்த வேண்டும்.  . இந்திய கடலோரக் காவல்படை உருவாக்கப்பட்டு சுமார் நாற்பது ஆண்டுகளில் மிகச் சிறந்த படைப் பிரிவாக தன்னை நிலைநிறுத்துக் கொண்டுள்ளது பாராட்டுக்குரியது என்றார் அரமனே.

சென்னை
இந்தியக் கடலோரக் காவல் படை தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்

பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி:தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் விக்ரம் மிஸ்ரி பேசுகையில்,  கடலோர காவல்படை என்பது போர்க்குணம் இல்லாத  தீவிரமடையாத, ஆக்கிரமிப்புகளை ஏற்படுத்தாத இல்லாத கட்டமைப்புடன் கூடிய ஒரு அமைப்பாகும்.

மேலும் கடலோரக் காவல்படைகள், கடல் பகுதிகளில் பாதுகாப்பதில் பகிர்வு முன்னுதாரணத்துடன் செயல்பட்டு வருகிறது. நாடுகளிடையே சிறப்பான ஒத்துழைப்பைப் பெருவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

இந்தியாவின் நோக்கம் என்பது அனைவரின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும் என்பதே யாகும்.  பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத் துவதற்காக அனைத்து கடலோர காவல்படை அதிகாரிகளும் முழுமையான ஒத்துழைப்பையும் அளிக்க வேண்டும் என்றார் மிஸ்ரி.
கடலோர பாதுகாப்புக்கான கூட்டு முயற்சிகள் என்ற இந்த மாநாட்டின் கருப்பொருளாகக் கொண்டு விவாதங்கள், கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற உள்ளது. மேலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கடல்சார் காவல் பிரிவு தலைவர்கள், தேசிய மற்றும் மாநில அரசுகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் கரையோரப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், இவ்வாறான அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்கொள்வது,   சர்வதேச கடல்சார் சட்டங்கள் மற்றும் அதிகாரம் பெற்ற அமைப்புகளின் பங்களிப்பு, கடலோரப் பாதுகாப்பிற்கான தொழில் நுட்பத் தீர்வுகள், கடலோரப் பாதுகாப்பின் மூலம் நீலப் பொருளாதாரம் குறித்து அறிந்து கொள்ளுதல், பிராந்திய கடலோரப் பாதுகாப்பில் உள்ள பிரச்னைகளை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்துல் உள்ளிட்டவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.

இந்தியக் கடலோரக் காவல் படை தலைமை இயக்குனர் வி.எஸ்.பதானியா தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் சுமார் 250-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். வெள்ளிக்கிழமையும் மாநாடு தொடர்ந்து நடைபெற உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top