Close
செப்டம்பர் 20, 2024 1:26 காலை

இந்தியாவின் தேசிய சின்னமான தேசிய சின்னமான அசோக சக்கரத்தில் நான்கு விதமான விலங்குகள்

இந்தியா

தேசிய சின்னம் அசோக சக்கரம்

இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தில் யானை, எருது, குதிரை, சிங்கம் என நான்கு விதமான விலங்குகள் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவின் தேசியச் சின்னம் (Emblem Of India) என்பது அரசு முத்திரைகள், ரூபாய், நாணயம் போன்றவற்றில் பொறிக்கப் பட்டுள்ளன. அசோகத் தூணில் உள்ள சிங்கத் தலைகள் இந்திய அரசு மற்றும் இந்தியக் குடியரசின் சின்னமாக (இலச்சினை) எடுத்துக் கொள்ளப்பட்டது.

கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர்,அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில் கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது. இதில் உள்ள சக்கரங்களை தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன .

தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன .சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன.

முரசின் மேல் சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன. இதில் உள்ள தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அசோகச் சக்கரம் என்றும் அழைக்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top