Close
செப்டம்பர் 20, 2024 1:28 காலை

சதம் அடித்த ஒரு கிலோ தக்காளி விலை… நுகர்வோர் அதிர்ச்சி

தமிழ்நாடு

சதமடித்த தக்காளி விலை

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் தக்காளி விலை கிலோ ரூ.100-ஐ தாண்டி உள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மத்திய அரசின் தவறான கொள்கைகள் காரணமாகவே தக்காளி விலை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.

இந்நிலையில் தக்காளி விலை அடுத்த 2 வாரங்களில் குறையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோகித்குமார் சிங் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தக்காளி விரைவில் அழுகிவிடக்கூடிய பொருள். அதனை பதுக்கி வைத்து விலையை உயர்த்த முடியாது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெய்த திடீர் மழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பல இடங்களுக்கு தக்காளி விநியோகம் தடைபட்டுள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். இன்னும் 10 முதல் 15 நாட்களுக் குள் தக்காளி விலை குறைய தொடங்கும் என்றார்.

சென்னையில்… தக்காளி விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. கிலோ ரூ.80 முதல் ரூ.100 வரை விற்கிறது. வரத்து குறைவால் இந்த விலை உயர்வு ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த விலை உயர்வு காரணமாக வீடுகளில் தக்காளி ரசத்தை கடந்த சில நாட்களாக இல்லத்தரசிகள் கைவிட்டு விட்டார்கள்.

ஓட்டல்களிலும் வழக்கமாக தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி இடம் பிடித்திருக்கும். ஆனால் இப்போது விலை உயர்வு காரணமாக கடந்த சில நாட்களாக ஓட்டல் மெனுவிலும் தக்காளி சட்னி இல்லை. விலை உயர்வு காரணமாக தக்காளி சட்னி கிடையாது என்றே வாடிக்கையாளர்களிடம் கூறுகிறார்கள்.

குறைந்தது இன்னும் 2 வாரங்களாவது தக்காளி சட்னிக்கு வாய்ப்பில்லை என்கிறார்கள். வரத்து அதிகரித்து விலை குறைந்த பிறகுதான் தக்காளி சட்னி இடம்பெறும் என்றனர். மதிய சாப்பாட்டிலும் சில ஓட்டல்களில் தக்காளி ரசத்துக்கு பதில் மிளகு ரசத்தை பயன்படுத்துகிறார்கள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top