Close
நவம்பர் 22, 2024 6:04 காலை

இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது குற்றமா?

இந்தியா

எம்பி ஜெயாபச்சன்

இந்தியாவில் மூத்த குடிமக்களாக இருப்பது  பாவமாகவும் குற்றமாகவும் நினைக்கும் நிலைக்கு அவர்கள்  தள்ளப்பட்டுள் ளனர். அந்த அளவுக்கு மூத்த குடிமக்கள் அனைவரும்  புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று ஜெயாபச்சன் நாடாளு மன்றத்தில் கடுமையாகக் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் ஜெயாபச்சன் பேசியதாவது: இந்தியா வின் மூத்த குடிமக்கள் 70 ஆண்டுகளுக்குப் பிறகு மருத்துவக் காப்பீட்டிற்குத் தகுதியற்றவர்கள். அவர்களுக்கு EMI இல் கடன் கொடுக்க மாட்டார்கள். ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவ தில்லை. அவர்களுக்கு நிதிப் பணிக்காக எந்த வேலையும் வழங்கப்படுவதில்லை. அதனால் அவர்கள் மற்றவர்களைச் சார்ந்திருக்கிறார்கள். அவர்கள் தனது இளமை பருவத்தில் அனைத்து வரிகளையும் செலுத்தினர்.

இப்போது மூத்த குடிமகனாக ஆன பிறகும் அவர்கள் அனைத்து வரிகளையும் செலுத்த வேண்டும். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான திட்டம் எதுவும் இல்லை. ரயில் பயணத்தில்  50 சதவீத தள்ளுபடியும் நிறுத்தப்பட்டுள்ளது.

வேதனையான  விஷயம் என்னவென்றால், அரசியலில் மூத்த குடிமகன் எம்.எல்.ஏ., எம்.பி., அமைச்சராக இருந்தாலும், அவர்கள் எல்லாவற்றையும் பெறுகிறார்கள். ஓய்வூதியம் பெறுகிறார்கள். ஆனால் நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் அரசாங்கத்திற்கு பல வகையான வரிகளை செலுத்துகிறோம், இன்னும் ஓய்வூதியம் இல்லை என்கிற நிலையில்தான் மூத்த குடிமக்கள் இருக்கின்றனர். மூத்த குடிமக்களை யார் கவனிப்பார்கள்?

முதுமையில் (சில காரணங்களால்) குழந்தைகளை கவனித்துக் கொள்ள முடியாவிட்டால் வேறு எங்கு செல்வார் கள் என்று கற்பனை செய்து பாருங்கள்? இது ஒரு பயங்கர மான மற்றும் வேதனையான விஷயம். வீட்டுப் பெரியவர்கள் கோபப்பட்டால் அது தேர்தலைப் பாதிக்கும். மேலும் அதன் விளைவுகளை அரசு தான் ஏற்க வேண்டும்.

ஆட்சியை மாற்றும் வல்லமை மூத்தவர்களுக்கு உண்டு. அவர்களை பலவீனர்கள் என்று புறக்கணிக்காதீர்கள். மூத்த குடிமக்கள் வாழ்வில் சிரமம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளளுங்கள். புதுப்பிக்க முடியாத திட்டங்களுக்கு அரசாங்கம் நிறைய பணம் செலவழிக்கிறது.

ஆனால் மூத்த குடிமக்களுக்கும் ஒரு திட்டம் தேவை என்பதை ஒருபோதும் உணரவில்லை. வங்கிகளின் வட்டி விகிதங்கள் குறைப்பதால் மூத்த குடிமக்களின் வருமானம் குறைந்து வருகிறது. குடும்பத்தை நடத்துவது சிரமமாகிவிட்டது. ஓய்வூதியம் கிடைத்தால் அதற்கும் வருமான வரி விதிக்கப் படும். இந்தியாவில் மூத்த குடிமகனாக இருப்பது தற்ப்போது குற்றமாகக் கருதவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று   ஜெயாபச்சன்  பேசினார்.

இவரது  பேச்சை கேட்ட  மூத்த குடிமக்கள் முதியவர்கள் நாடு முழுவதும் அவரை கொண்டாடி வருகின்றனர். நாங்கள் இதுவரை கேட்காத குரலை மிகவும் சப்தமாக கேட்க விரும்புகிறோம்.

இது ஒரு வெகுஜன இயக்கமாக மாறும். மூத்த குடிமக்கள் அனைவரும் இதை பகிர வேண்டும். தங்கள் நண்பர்கள் அனைவருடனும். தயவு செய்து அவர்களிடம் கோரிக்கை விடுங்கள் என மூத்த குடிமக்கள்  இந்தப் பேச்சை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top