Close
செப்டம்பர் 19, 2024 11:15 மணி

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்வு

சென்னை

சுதந்திர தினத்தை முன்னிட்டு எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அரசு பள்ளி மாணவிக்கு கல்வி உதவித் தொகையை வழங்கிய துறைமுக தலைவர் சுனில் பாலிவால்

எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் ஆண்டு வருவாய் ரூ.1,009 கோடியாக உயர்ந்துள்ளது என இத்துறை முகத்தின் தலைவர் மேலாண்மை இயக்குனர் சுனில் பாலிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

77 வது சுதந்திர தின விழா சென்னையில்  எண்ணூர் காமராஜர் துறைமுக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை ம  நடைபெற்றது. இந்த விழாவில் துறைமுகத் தலைவர் சுனில் பாலிவால் கலந்துகொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

பின்னர் தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு  ஏற்ற அவர் ஊழியர்கள், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், சுய உதவி குழு பெண்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோருக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

 விழாவிவ் சுனில் பாலிவால் பேசியதாவது:

நிலக்கரி கையாளுவதற்காக தொடங்கப்பட்ட இத்துறைமுகம் இன்றைக்கு பல்துறை சரக்குகளை கையாளும் துறைமுகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆண்டுக்கு 12 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாளும் திறன் கொண்டதாக தொடங்கப் பட்ட துறைமுகம் தற்போது ஆண்டுக்கு 55 மில்லியன் சரக்குகளை கையாளும் துறைமுகமாக வளர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டில் சுமார் 44 மில்லியன் சரக்குகளை கையாண்டு ஆண்டு ஒத்த வருவாயாக ரூ.1,009 கோடி ஈட்டி உள்ளது.  இதில் நிகர லாபம் மட்டும் ரூ. 346 கோடி ஆகும்.

மோட்டார் வாகனங்களை ஏற்றுமதி செய்யும் முக்கிய துறைமுகமாக காமராஜர் துறைமுகம் உள்ளது. வாகன போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ளும் வகையில் வல்லூரில் இருந்து  துறைமுகம் வரை ரூ.195 கோடியில் நான்கு வழி கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கூடுதல் ரயில் பாதை  அமைப்பதற்கான ரூ.88 கோடியில் நடைபெற்று வருகிறது. வாகனங்களை ஏற்றுமதி செய்வதற்கான வசதிகளை உள்ளடக்கிய முனையம் அமைப்பதற்காக ரூ. 149 கோடியில் புதிய ஏற்றுமதி இறக்குமதி முனையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஐ ஓ சி எல் நிறுவனம் சார்பில் ரூ. 921 கோடி செலவில் பெட்ரோலிய எண்ணெய் சரக்குகளை கையாள புதிய கப்பல் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. ரூ.156 கோடி செலவில் துறைமுகத்தை  தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் ரூ. 40 கோடி கல்வி, சுகாதாரம், பொது கட்டமைப்பு கிராமப்புற வளர்ச்சி உள்ளிட்ட திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையை ஏற்று 9 ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் புதிய கட்டிடங்களை அமைப்பதற்கு துறைமுக நிர்வாகம் உதவிகளை அளித்துள்ளது.

நாட்டின் 75 வது சுதந்திர தின பெரு விழாவினை கொண்டா டும் வகையில் தடுப்பூசி செலுத்துதல், மரம் நடுதல் குருதி கொடை அளித்தல் உள்ளிட்ட நிகழ்வுகளை துறைமுக நிர்வாகம் மேற்கொண்டது என்றார் சுனில் பாலிவால்.

இந்நிகழ்ச்சியில் பொது மேலாளர்கள் யாட்டின் பட்டேல், கவிதா சாத்வி, பாலன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top