Close
நவம்பர் 22, 2024 4:24 காலை

சென்னைத் துறைமுகம் சார்பில் ரூ.9 ஆயிரம் கோடி முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

சென்னை

சென்னை துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி

விரைவில் நடைபெற உள்ள உலகளாவிய கடல்சார் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக ரூ. 9 ஆயிரம் கோடி முதலீட்டிற் கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் சென்னைத் துறைமுக நிர்வாகம் புதன்கிழமை கையெழுத்திட்டது.

இது குறித்து சென்னைத் துறைமுகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழி அமைச்சகம் சார்பில் மூன்றாவது உலகளாவிய கடல்சார் உச்சி மாநாடு வரும் அக்.17 மும்பையில் தொடங்குகிறது. தொடர்ந்து மூன்று நாள்கள் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் ரூ.15 லட்சம் கோடி மதிப்பீட்டிலான பல்வேறு திட்டங்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து முதலீடுகள் திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை துறைமுகத்தலைவர் சுனில் பாலிவால், துணைத் தலைவர் எஸ்.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலையில் புதன்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், கல்ஃப் ஆயில் லூப்ரிகன்ட்ஸ்,

போஸ்கோ இந்தியா சென்னை ஸ்டீல், கோரமண்டல் இன்டர்நேஷனல்,  எலைட் ஷிப்பிங் ஏஜென்சிஸ்,  ஐபிஆர்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கான முதலீடுகளைப் பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை துறைமுக போக்குவரத்து மேலாளர் எஸ்,கிருபானந்தசாமி  கையெழுத்திட்டு பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.

மேலும் சி.பி.சி.எல்,  ஹூண்டாய் மோட்டார்ஸ், கேடிவி ஹெல்த் ஃபுட்ஸ்,  எம்.எஸ்.சி. சி்ப்பிங்,  செயின்ட் கோபன்,  எல் & டி உள்ளிட்ட நிறுவனங்களுடன் ரூ. 65 கோடி முதலீட்டிலான திட்டங்களுக்கு மும்பையில் நடைபெற உள்ள மாநாட்டில் சென்னைத் துறைமுகம் கையெழுத்திட உள்ளனது.

மொத்தம் ரூ. 74 ஆயிரம் கோடிக்கு 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சென்னைத் துறைமுகத்தால் கையெழுத்திடப் படுகிறது.    இத்திட்டங்கள் மூலம் சென்னைத் துறைமுகம் மூலம் நடைபெறும் வர்த்தகம் மேலும் வளர்ச்சியடையும். மேலும் பிரதமரின் “ஆத்மநிர்பர் பாரத் அபியான்” திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமையும்.

மாநாட்டின் முதல் நாளான அக்.17 -அன்று தமிழ்நாடு அரசு மற்றும் சென்னைத் துறைமுகம் இணைந்து நடத்தும் முதலீடுகளுக்கான சிறப்புக் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் https://maritimeindiasummit.com/conference-registration/ என்ற இணையத் தள முகவரியில் பதிவு செய்யலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top