Close
நவம்பர் 22, 2024 4:23 காலை

ஆச்சர்யம்… ஆனால்…உண்மை..! 605 -ஆவது நாளாக மாற்றமின்றி நீடிக்கும் பெட்ரோல் டீசல் விலை

தேனி

பெட்ரோல்-டீஸல் விலை உயர்வின்றி 605 நாட்கள்

சென்னையில்  605 -ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றம் இல்லாமல் (ஜனவரி 16)  இன்று வரை இருந்து வருகிறது.

ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் 94.24 ரூபாய்க்கும் விற்பனையானது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. தமிழகத்தில், 2021 நவ.,3ல் ஒரு லிட்டர் பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 102.59 ரூபாய்க்கு விற்பனையாகின. இதுவே, பெட்ரோல், டீசல் விற்பனையில் உச்ச விலையாக இருந்தது.

பின், உ.பி., உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டசபை தேர்தலால் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. அம்மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு இடையில் நிலவும் போர் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. சென்னையில் மே 21 வரையில் நீண்ட நாட்களாக பெட்ரோல் 110.85 ரூபாய், டீசல் 100.94 ரூபாய் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் நீடித்து வந்தது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டு மே-21-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீர் என அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 7.50 ரூபாயும் குறைக்கப்படும் என அறிவித்தார்

அதனை தொடர்ந்து சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து 102.63 ரூபாய்க்கும், டீசல் ரூ.6.70 காசு குறைந்து 94.24 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்பட்டது. இன்று 605-வது நாளாக பெட்ரோல் ரூ.102.63க்கும் டீசல் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனையாகின்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top