பாஜக பிரமுகர் நடிகை குஷ்பூவின் மாமியார் அதாவது நம்ம இயக்குநர்ர் சுந்தர்.சியின் தாயார் தெய்வானை சிதம்பரம் பிரதமர் மோடியை ஆசீர்வதித்தார்.
பிரதமர் மோடி அயோத்தி குழந்தை ராமர் கோயில் பிராணபிரதிஷ்டை நிகழ்ச்சியில் இன்று பங்கேற்கிறார். அதற்காக 11 நாள் கடும் விரதம் இருந்து வரும் அவர் ராமாயணத்தில் சொல்லப்பட்டுள்ள புனித இடங்களில் வழிபட்டார்.
தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை துவக்கி வைக்க வந்த பிரதமர்மோடி, ஸ்ரீராமர் வம்சத்தின் குலதெய்வமான ஸ்ரீரங்க பெருமாளை தரிசனம் செய்தார். ராமர் வழிபட்ட ராமேஷ்வரத்திலும் வழிபட்டார்.
இயக்குநர் சுந்தர்.சியின் அம்மா, குஷ்புவின் மாமியார் தெய்வானை சிதம்பரம் பிள்ளை ஒரு ராம் பக்தை அவருடைய ஆசை ராமர் கோயில் கட்டிய மோடியை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்பது தான். தெய்வானை சிதம்பரம் பிள்ளை மிகவும் பிரியப்பட்டு வேண்டுகோள் விடுத்தார்.
மருமகள் பாஜகவில் பொறுப்பில் இருப்பதால் தன்னுடைய ஆசையை நிறைவேற்ற குஷ்பூவிடம் முறையிட குஷ்பூவும் அனுமதி பெற்றுக்கொடுத்தார். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடக்கி வைக்க வந்த மோடியை சந்திக்க வந்தார் குஷ்பூவின் மாமியார்.
92 வயதான குஷ்பூவின் மாமியார் தெய்வானையை சந்தித்த மோடி அவரை வணங்கி ஆசி பெற்றார். அது மட்டுமல்லாமல் குஷ்பூவின் மாமியார் அவர்களின் குல தெய்வத்தின் குங்கும பிரசாதத்தையும் மோடியின் நெற்றியில் இட்டு வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார்.