இந்தியாவின் புதிய அழகி..பார்த்தால் அசந்து போவீங்க…
இந்தியாவின் விளம்பரத்துறையில் கலக்கும் புதிய அழகியை கண்டால் அசந்து போவீங்க…
உத்தரபிரதேசத்தின் ஜான்சி பின்னணியில் இன்ஸ்டாகிராமில் வலம் வரும் ’நைனா அவதார்’ என்ற இளம்பெண், இந்தியாவின் இன்னொரு இணைய உலகில் பிரபலமாக வளர்ந்து வருகிறார். அவரிடம் தங்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த முன்னணி நிறுவனங்கள் வரிசையில் காத்திருக்கின்றன. இந்த நைனா அவதார், மெய்யாலும் ரத்தமும் சதையும் கொண்ட பெண் அல்ல. செயற்கை நுண்ணறிவு உபயத்தில் உருவாக்கப்பட்ட விர்ச்சுவல் குமரி.
ஏ.ஐ தொழில்நுட்பத்தை மார்பிங், டீஃப் பேக் என ஒரு கும்பல் எதிர்மறையாக கொண்டு செல்ல, நேர்மறையாக சிந்தித்தவர்கள் இது போன்ற விர்ச்சுவல் சமூக ஊடக செலிபிரிட்டிகளை உருவாக்கி வருமானம் பார்க்கின்றனர்.
தமிழிலும் இதுபோன்ற அழகுப் பதுமைகள் ஏ.ஐ., உபயத்தில் வலம் வந்த போதும், அவற்றை ஆபாச நோக்கத்துக்காகவே அதன் கர்த்தாக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நைனா அவதாரை உருவாக்கியவர்கள், வகைதொகையாய் வருமானம் பார்க்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
சர்வதேச அளவில் பிரபலமான பல பிராண்டுகளுக்காக அவர் விளம்பரம் செய்து வருமான ஈட்டுகிறார். நைக்கா, பூமா மற்றும் பெப்சி போன்ற பிரபல நிறுவனங்களுக்கு நைனா விளம்பரம் செய்திருக்கிறார். மேலும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் நடப்பில் இருக்கும் சக விர்ச்சுவல் பிரபலங்களின் மத்தியில் ஒரு நட்சத்திரமாக நைனா அவதார் ஜொலித்து வருகிறார்.