Close
நவம்பர் 22, 2024 12:37 காலை

ரூ.200 செல்லுமா? செல்லாதா..? ரிசர்வ் வங்கி விளக்கம்..!

ரூ.200 நோட்டு -கோப்பு படம்

ரூ. 200 நோட்டுக்களை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. உடனே நம்ம மக்கள் அடடே ரூ.200 நோட்டுகளும் செல்லாமல் போய்டுமோ அன்று அச்சப்படத் தொடங்கினர்.

ரூ. 200 நோட்டு

2016ம் ஆண்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த ரூ. 500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டன. அதன்பின் ரூ.500 மற்றும் ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்துலக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

தொடர்ந்து, பொதுமக்கள் அந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தத்தொடங்கினர். இதனையடுத்து 2023ம் ஆண்டில் ரிசர்வ் வங்கி ரூ. 2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்தது. அதை திரும்பப் பெறுவதற்கு பல கால நீட்டிப்பும் செய்யப்பட்டது.

ரிசர்வ் வங்கி விளக்கம்

இந்நிலையில் தற்போது ரூ.137 கோடி மதிப்புள்ள ரூ. 200 நோட்டுகளை மத்திய அரசு திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. எனவே, ஒட்டுமொத்தமாக ரூ.200 நோட்டுகள் திரும்பப் பெறப்படுமா அல்லது செல்லாதவை என அறிவிக்கப்படுமா என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

ஆனால், ரூ. 200 நோட்டுக்கள் அதிக தேய்மானம் அடைந்ததுடன் கிழந்ததால் அவை திரும்பப் பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. கடந்த நிதியாண்டில் மட்டும் ரூ. 633 கோடி மதிப்புள்ள ரூ. 500 நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

ரூ.2000-ம் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டவுடன் 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் மட்டுமே அதிகமாக புழக்கத்தில் உள்ளன. அதிக பயன்பாடுகளால் நோட்டுகளில் தேய்மானம் மற்றும் கிழிசல்கள் ஏற்படுகின்றன. அதனால் தேய்ந்த மற்றும் கிழிந்த 200 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசர்வ் வாங்கி சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top