Close
நவம்பர் 21, 2024 7:40 மணி

இந்தியாவில் அதிக தனிநபர் வருமானம் பெறும் மாநிலங்கள் எது தெரியுமா..?

தனிநபர் வருமானம் -கோப்பு படம்

தனிநபர் வருமான அடிப்படையில் இந்தியாவில் பணக்கார மாநிலங்கள் அதாவது அதிக தனி நபர் வருமானம் பெறும் மாநிலங்களாக தெலுங்கானா, டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்கள் உள்ளன. அதே வேளையில் பீகார் மற்றும் உத்தரபிரதேசம் ஆகியவை மிகக் குறைந்த வருமான இடத்தில் உள்ளன.

தென் மாநிலங்கள் இப்போது மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன. ஆனாலும் மாநில வாரியான ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. குறிப்பாக மேற்கு வங்கம் போன்ற ஏழை மாநிலங்களில். வருமான இடைவெளி அதிகரித்து வருகிறது. அதைப்போக்குவதற்கு புதிய பொருளாதாரக் கொள்கைகள் தேவை.

தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்கள் கணிசமான பொருளாதார முன்னேற்றத்தை அடைந்துள்ளன. ஒட்டுமொத்தமாக இந்த மாநிலங்கள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30சதவீத அளவுக்கு பங்களிப்புச் செய்கின்றன.

அதிகரித்துவரும் பொருளாதார இடைவெளி, கொள்கை வகுப்பாளர்களுக்கு பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் கொள்கை வகுப்பாளர்கள் நாட்டின் எல்லா பிராந்தியங்களிலும் சமமான வளர்ச்சியை எதிர்பார்க்கின்றனர்.

தனிநபர் வருமான அடிப்படையில் உயர் வருமானம் பெறும் மாநிலங்கள்

2024 செப்டம்பர் 18ம் தேதி அன்று வெளியிடப்பட்ட பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் (EAC-PM) அறிக்கையின்படி, தேசிய அளவில் சராசரி சதவீதத்தின் அடிப்படையில் தனிநபர் வருமானத்தின் அடிப்படையில் உயர் வருமானம் பெறும் ஐந்து மாநிலங்கள் இவை:

தெலங்கானா: 176.8%
டெல்லி: 167.5%
ஹரியானா: 176.8%
மகாராஷ்டிரா: 150.7%
உத்தரகாண்ட்: 145.5%

2014 இல் உருவான இந்தியாவின் புதிய மாநிலமான தெலங்கானா, பணக்கார மாநிலங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. டெல்லி மற்றும் ஹரியானாவும் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. டெல்லி அதிக தனிநபர் வருமானம் பெறும் இடங்களில் ஒன்றாக விளங்குகிறது. மகாராஷ்டிரா, இந்தியாவின் முதல் GDP பங்களிப்பாளராக இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் முதல் ஐந்து இடங்களுக்குள் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனிநபர் வருமானத்தில் மிகவும் குறைவான வருவாய் பெறும் மாநிலங்கள்

தனிநபர் வருமானத்தில் இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள்:

பீகார்: 39.2%
உத்தரப் பிரதேசம்: 43.8%
மத்திய பிரதேசம்: 46.1%
ராஜஸ்தான்: 51.6%
சத்தீஸ்கர்: 52.3%

உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார், அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களாக இருந்தாலும், தேசிய சராசரியில் முறையே 43.8% மற்றும் 39.2% என தனிநபர் வருமானம் குறைவாக உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top