Close
நவம்பர் 23, 2024 9:29 காலை

எலான்மஸ்க் உடன் முகேஷ்அம்பானி மோதல்

செயற்கைக்கோள் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரமை ஒதுக்கீடு செய்யும் இந்திய அரசின் கொள்கையால் இரு பெரும் தலைகள் மோதுகின்றன.

செயற்கைக்கோள் பிராட்பேண்ட் ஸ்பெக்ட்ரமை நிர்வாக ரீதியாக ஒதுக்கும் இந்திய அரசின் முடிவுக்கு எலான் மஸ்க் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முடிவுக்கு அம்பானி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் இந்த முடிவால் Starlink-ன் சேவைகளை இந்தியாவில் எளிதாகவும் விரைவாகவும் கொண்டுவர வழிவகுக்கும் என எலான்மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நியாயமான போட்டியை ஊக்குவிக்க ஏலம் முறை தேவை என்றும், நிர்வாக ரீதியான ஒதுக்கீடு மிகவும் பாரபட்சமான முறையாகும் என்றும் ரிலையன்ஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பல ஆண்டுகளாக இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ரிலையன்ஸ் நிறுவனம், செயற்கைக்கோள் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களை Starlink-இடம் இழக்க நேரிடும் என அஞ்சுகிறது.

இரு தரப்பும் இரு விதமான கருத்து தெரிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள TRAI-இன் பரிந்துரைகளை பொறுத்து செயற்கைக்கோள் ஸ்பெக்ட்ரம் எவ்வாறு ஒதுக்கப்படும் என்பதில் இறுதி முடிவு தெரியவரும் என கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top