Close
நவம்பர் 14, 2024 4:56 மணி

இந்தியாவில் கார்பன் உமிழ்வை குறைக்கும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில் சேவை..!

புதிய ஹைட்ரஜன் ரயில்

இந்தியா, ஹைட்ரஜனில் இயங்கும் தனது முதல் ரயிலை டிசம்பரில் 2024 இல் இயக்க தயாராகி வருகிறது. இது முற்றிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பயணத்திற்கான முதல் படியாகும். டீசல் அல்லது மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த ஹைட்ரஜனால் இயங்கும் இந்த பசுமை ரயில் இந்திய ரயில்வேக்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். 2030 ஆம் ஆண்டுக்குள் “பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு” நாடாக வேண்டும் என்ற இலக்குடன் இந்த முதல் ஹைட்ரஜன் ரயில் சேவை தொடங்கவுள்ளளது.

ஹைட்ரஜன் ரயில் இயங்கும் பாதை, வேகம் மற்றும் அதன் சிறப்பு அம்சங்கள் குறித்து அறிந்துகொள்வோம் வாங்க.

இந்திய ரயில்வேயின் பசுமை புரட்சியின் அற்புதமான ரயில் சேவை இதுவாகும். ஹைட்ரஜனில் இயங்கும் இந்த ரயில் இயங்குவதற்கான மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு தண்ணீரை முதன்மை ஆதாரமாகப் பயன்படுத்துகிறது.

இது நாட்டிலேயே முதல் முறையாகும். பாரம்பரிய டீசல் அல்லது மின்சார இயந்திரங்களைப் போலல்லாமல், இந்த புதுமையான ரயில் ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைப் பயன்படுத்தி உந்துதலுக்குத் தேவையான மின் ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள், ஆக்ஸிஜனுடன் இணைந்து, மின்சாரத்தை உற்பத்தி செய்கின்றன. இதன் இணை உற்பத்தி நீராவி மற்றும் நீர் மட்டுமே. இதன் விளைவாக பூசுற்று சூழலுக்கு பூஜ்ஜிய மாசு விளைவிக்கும் இயக்கமாக அமைகிறது. இந்த சுத்தமான ஆற்றல் அணுகுமுறை இந்தியாவில் எதிர்கால ரயில்களுக்கான தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏன் ஹைட்ரஜன் பயன்பாடு?

ஹைட்ரஜன் ரயில் அதன் கார்பன் தடத்தை குறைத்து டீசல் என்ஜின்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை அகற்றும் இந்திய ரயில்வேயின் லட்சிய திட்டத்தின் ஒரு மாற்றாகும். ஹைட்ரஜன் எரிபொருள் செல்களைப் பயன்படுத்துவதன் மூலம், கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள் மற்றும் துகள்கள் ஆகியவை வெளியிடுவது தவிர்த்து ரயிலை இயங்கச் செய்கிறது. இது எளிதாக கிடைக்கக்கூடிய மிகவும் நிலையான போக்குவரத்து அமைப்புகளில் ஒன்றாக விளங்கும்.

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான நட்புடன் இருப்பதுடன், டீசலில் இயங்கும் என்ஜின்களை விட ஹைட்ரஜனில் இயங்கும் ரயில்கள் 60 சதவீதம் சத்தத்தையும் குறைக்கின்றன. இதனால் ஓசை மாசுபடும் குறைகிறது. நாடு முழுவதும் 35 ஹைட்ரஜன் ரயில்களை இயக்கம் திட்டத்துடன், இந்திய ரயில்வே தூய்மையான, அமைதியான எதிர்காலத்திற்கு தயாராகி வருகிறது.

பாதை மற்றும் வேக விவரங்கள்

ஹைட்ரஜன் ரயிலின் சோதனை ஓட்டம் ஹரியானாவில் உள்ள ஜிந்த்-சோனிபட் வழித்தடத்தில் 90 கிலோமீட்டர் தூரம் செல்லும். டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில்வே, நீலகிரி மலை இரயில்வே, கல்கா-சிம்லா இரயில் மற்றும் இந்தியாவின் இயற்கை மற்றும் தொலைதூரப் பகுதிகளில் உள்ள பாரம்பரிய மலை இரயில்கள் ஆகியவை பரிசீலனையில் உள்ள கூடுதல் வழித்தடங்களில் அடங்கும்.

இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 140 கிமீ வேகத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது பயணிகளுக்கு விரைவான, நிலையான மற்றும் வசதியான பயணத்தை வழங்குகிறது. ஒவ்வொரு ஹைட்ரஜன் எரிபொருள் தொட்டியும் எரிபொருள் நிரப்புவதற்கு முன்பு 1,000 கிலோமீட்டர் வரை ரயிலை இயக்க அனுமதிக்கும். இது எதிர்காலத்தில் நீண்ட பாதைகளுக்கு ஏற்றதாக இருக்கும்.

ஹைட்ரஜன் ரயில்- அறிவியல் விளக்கம்

ஹைட்ரஜன் ரயிலில், ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள், ஆக்ஸிஜனுடன் இரசாயன எதிர்வினை மூலம் ஹைட்ரஜன் வாயுவை மின் ஆற்றலாக மாற்றுகின்றன. இந்த மின் ஆற்றல் ரயிலின் மோட்டார்களை இயக்குகிறது. அதே நேரத்தில் எதிர்வினையின் உப தயாரிப்புகளான நீர் மற்றும் நீராவி மட்டுமே எஞ்சுகின்றன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும், ரயிலுக்கு தேவையான இரசாயன மாற்றத்திற்கு உட்படுத்த சுமார் 40,000 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இந்த ரயில்களின் இயக்கத்திற்கு உதவும் வகையில் பிரத்யேக நீர் சேமிப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு

ஒவ்வொரு ஹைட்ரஜன் ரயிலின் வளர்ச்சிக்கும் 80 கோடி ரூபாய் செலவாகும். ஹைட்ரஜன் சேமிப்பு வசதிகள் மற்றும் பிரத்யேக எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் போன்ற விரிவான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் பணிகள் மற்றும் ரயிலின் இயக்கத்திற்கு தேவையான இதர பணிகளும் நடந்து வருகின்றன.

ஹைட்ரஜன் எரிபொருள் செல்கள் மற்றும் ஆலைகளின் ஆரம்ப சோதனைகள் மற்றும் ஒப்புதல்களின் வெற்றியுடன், இந்திய ரயில்வே தனது 2030மக் ஆண்டில் நிகர-பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைவதற்கு இந்த முன்னேற்ற செயல்பாடுகளை உருவாக்குவதன் மூலமாக நம்பிக்கையுடன் இருக்கிறது.

நாடு முழுவதும் விரிவாக்கத் திட்டங்கள்

சோதனை ஓட்டங்களைத் தொடர்ந்து, இந்திய ரயில்வே தனது ஹைட்ரஜன் ரயில் சேவைகளை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. 35 ஹைட்ரஜன் ரயில்கள் 2025 ஆம் ஆண்டுக்குள் பல்வேறு வழித்தடங்களில் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்கள் பாரம்பரிய டீசல் ரயில்களுடன் ஒப்பிடக்கூடிய வேகம் மற்றும் பயணிகளுக்கான முழுமையான சேவைகளை வழங்கும். சிறந்த செயல்திறனை வழங்குவதுடன் சுற்றுச்சூழலுக்கு சிறந்த சூழல் நட்பு மாற்றாகவும் விளங்கும்.

பசுமை இரயில்வேக்கான எதிர்காலம்

இந்தியாவின் ஹைட்ரஜன் ரயிலின் துவக்கமானது நிலையான இரயில் போக்குவரத்துக்கான ஒரு சிறந்த முன்னோடித் திட்டத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது, இந்திய ரயில்வே அதன் லட்சியமான காலநிலை மாற்றத்திற்கு உதவும் இலக்குகளை நோக்கி முன்னேற உதவுகிறது. பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு, குறைக்கப்பட்ட ஒலி மாசு மற்றும் அதிவேகத்துடன், இந்த ஹைட்ரஜன் ரயில் இந்தியாவில் ரயில் பயணத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

0 Comments
scroll to top